2 குழந்தைகளை கொலை செய்த வழக்கு : அபிராமிக்கு அக்.12 வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு!
கள்ளக்காதலுக்காக இரண்டு குழந்தைகளை துடிக்க துடிக்க கொன்ற குன்றத்தூர் அபிராமிக்கு அக்டோபர் 12ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
சென்னை: கள்ளக்காதலுக்காக இரண்டு குழந்தைகளை துடிக்க துடிக்க கொன்ற குன்றத்தூர் அபிராமிக்கு அக்டோபர் 12ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
சென்னையை அடுத்த குன்றத்தூர் மூன்றாம் கட்டளையை சேர்ந்த அபிராமிக்கு அப்பகுதியில் உள்ள பிரியாணிக்கடை ஊழியருடன் கள்ளக்காதல் ஏற்பட்டது. இதையடுத்து அவருடன் வாழ நினைத்த அபிராமி, அதற்கு இடையூறாக இருந்த தனது இரண்டு குழந்தைகளை கடந்த மாதம் 30 மற்றும் 31ஆம் தேதிகளில் துடிக்க துடிக்க கொன்றார்.

பின்னர் கேரளா தப்பிச்சென்ற அவரை நாகர்கோவிலில் கள்ளக்காதலன் சுந்தரத்தை வைத்து பிடித்தனர் போலீசார். இதையடுத்து சென்னை கொண்டு வரப்பட்ட அபிராமி கள்ளக்காதலன் சுந்தரத்தின் ஆலோசனைப்படியே குழந்தைகளை கொன்றதாக கூறினார்.
இதையடுத்து ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அபிராமி மற்றும் அவரது கள்ளக்காதலன் சுந்தரத்திற்கு 15 நாள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது.
இந்நிலையில் 2 குழந்தைகளை கொன்ற வழக்கில் அபிராமி மற்றும் சுந்தரத்திற்கு நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. அபிராமி மற்றும் சுந்தரத்தை அக்டோபர் 12ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications