தே.மு.தி.க. என்ற ‘மது’வாத கட்சிக்கு 16ம் தேதி பக்கவாதம் வரப் போகிறது... ‘குண்டு’ ஆர்த்தி
சென்னை: இந்தியாவை ஊழலில் இருந்து காப்பாற்ற லோக்சபா தேர்தலில் அதிமுகவுக்கு வாக்களிக்குமாறு தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்
திருவள்ளூர் (தனி) நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் வேணுகோபாலை ஆதரித்து நேற்று கும்மிடிப்பூண்டியை அடுத்த சுண்ணாம்புகுளம் கிராமத்தில் திறந்த ஜீப்பில் நின்று பிரசாரம் மேற்கொண்டார் நடிகை ஆர்த்தி.
அப்போது அவர் காங்கிரஸ் மற்றும் பிற கட்சிகளை கடுமையாக விமர்சித்தா. லோக்சபா தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் மற்ற கட்சிகளுக்கு பக்கவாதம் வரப்பொவதாக அவர் தெரிவித்தார்.
மேலும், இது தொடர்பாக அவர் பேசியதாவது:-

ராணுவம் தேவையில்லை...
இந்தியாவை காப்பாற்ற ராணுவம்தான் வரவேண்டும் என்பது இல்லை. நீங்கள் இந்த தேர்தலில் அ.தி.மு.க.விற்கு ஓட்டு போட்டால் நாட்டை காப்பாற்றலாம்.

காங், திமுக கூட்டு....
இலங்கை தமிழர்களை அழித்த செயலில் காங்கிரசுக்கும், தி.மு.க.விற்கும் பங்கு உண்டு. இலங்கையில் இருக்கிற தமிழர்கள் அழிவது போல தமிழ்நாடு மாறி விடக்கூடாது.

வேப்பிலை அடித்து விரட்டுங்கள்...
செம்மண் ஊழல் முதல் ஸ்பெக்ட்ரம் ஊழல் வரை காங்கிரஸ் செய்து இருக்கிறது என்றால் அதற்கு அம்பாக இருந்தது தி.மு.க..தான். எனவே தி.மு.க.வையும், காங்கிரசையும் இந்த தேர்தலில் வேப்பிலை அடித்து நீங்கள் விரட்ட வேண்டும்.

மனதில் ஏற்றாதீர்கள்...
எல்லோருடைய பிரசாரத்தையும் பாருங்கள். கேளுங்கள். ஆனால் அதனை காதிலும், மனதிலும் ஏற்றுக்கொள்ளாதீர்கள்.

இவங்க நோக்கமெல்லாம்...
தே.மு.தி.க. தலைவர் நிலையில்லா மனிதர். மச்சான் டெல்லிக்கு போய் ஊழல் செய்யணும், ராமதாசுக்கு அவரது பையன் டெல்லிக்கு போகணும், மதவாத கட்சிகளுடன் சேர்ந்து கொண்டு கரசேவை செய்வதற்காக கறுப்பு துண்டு போட்டு கொண்டு இருப்பவர் வைகோ.

பக்கவாதம் வரப்போகிறது...
மொத்தத்தில் சாதி வாத கட்சி, தே.மு.தி.க. என்ற மதுவாத கட்சி, மதவாத கட்சி இவையெல்லாம் சேர்ந்து 16-ந் தேதி தீர்ப்பு வரும்போது பக்கவாதம் வந்து படுத்துகிடக்கப் போகிறது.

தமிழ் ஈழம் மலரும்....
இந்தியா வல்லரசாக மாறுவதற்கும், தமிழ்நாடு செழிப்பதற்கும் இரட்டை இலையில் வாக்களிக்க வேண்டுகிறேன். இரட்டை இலை மலர்ந்தால்தான் நமது வாழ்வு உயரும். அதுமட்டுமன்றி தமிழ் ஈழம் மலரும்' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.
-
எல்லா பிரச்சனைக்கும் நான் காரணமா.. வாடகை பேச்சாளர்கள் இப்ப பேசுங்க.. வரிந்து கட்டிய லீமாரோஸ் -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications