செங்கோட்டை-புனலூர் அகல ரயில் பாதை நிறைவேற 5 ஆண்டுகள் ஆகும்: நிதி பற்றாக்குறை
செங்கோட்டை: செங்கோட்டை- புனலூர் அகல ரயில்பாதை அமைக்கும் திட்டத்திற்கு போதுமான நிதி ஓதுக்கப்படாத காரணத்தால் இந்த திட்டம் நிறைவேற சுமார் நான்கு ஆண்டுகளுக்கு மேல் ஆகும் என தெற்கு ரயில்வேத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
செங்கோட்டையிலிருந்து புனலூருக்கு அகல ரயில்பாதை அமைக்கும் பணி கடந்த 2010ம் ஆண்டு துவங்கப்பட்டது. சுமார் ரூ.375 கோடி மதிப்பில் அகல ரயில்பாதை அமைத்திட திட்டமிடப்பட்ட அதன்படி இந்த பாதையில் பல கட்டங்களாக பணிகள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.
தற்போது நிதி பற்றாக்குறையினால் ரயில்பாதைக்கான பணிகள் தொய்வு அடைந்துள்ள நிலையில் அதிகாரிகளின் அறிவிப்பும் ரயில் பயணிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக – கேரளா மக்கள்
செங்கோட்டை - புனலூர் அகல ரயில்பாதையில் பாதையில் 120 சிறிய பாலங்களும், 5 பெரிய பாலங்களும் அமைக்கப்பட முடிவெடுக்கப்பட்டது. இவ்வழித்தடத்தை பொறுத்தவரை தமிழக - கேரள மக்கள் மட்டுமின்றி சபரி மலை பக்தர்களுக்கும், வெளிமாநிலத்தவருக்கும் பயன்பெறக்கூடும் என்ற அடிப்படையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட அறிவிக்கப்பட்டது.

மலைக்குகைகள்
இருப்பினும் இத்திட்டத்தை செயல்படுத்தும்போது ஐந்து மலைக்குகைகளை குடைந்து பாதை அமைக்கப்பட வேண்டியிருந்ததால் மேற்கொள்ளும் பணிக்காலம் கூடுதலாக நீட்டிக்கப்பட்டது. கேரள பகுதியில் நான்கு குகைகளும், தமிழக பகுதியில் ஒரு குகையும் குடைந்து தான் அகல ரயில்பாதை அமைக்க வேண்டுமென்ற நிலையில் தற்போது அதற்கான பணிகளும் ஓரிரு குகைகளில் பெருமளவில் முடிந்துவிட்டன. சுமார் ரூ.12 கோடி மதிப்பில் இந்த பணிகளை மட்டும் மேற்கொள்ள மதிப்பீடு செய்யப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

2013ல் முடிவடைய வேண்டும்
செங்கோட்டையிலிருந்து புனலூருக்கு சுமார் 54 கி.மீ., தூரத்திற்கு அகல ரயில்பாதை அமைக்கப்பட்டு 2013ம் ஆண்டு இறுதிக்குள் பணிநிறைவடையும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் நிதி பற்றாக்குறையினால் இது மேலும் 5 ஆண்டுகள் தாமதமடையும் என தெற்கு ரயில்வே பொது மேலாளர் ராகேஷ் மிஸ்ரா கூறியுள்ளார்.

ராகேஷ் மிஸ்ரா ஆய்வு
நெல்லை ஜங்ஷன் ரயில்வே ஸ்டேஷனில் நடக்கும் பணிகள், வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட ராகேஷ் மிஸ்ரா, ரயில்வே துறையில் மின்மயமாக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. தெற்கு ரயில்வேயில் சென்னை முதல் கன்னியாகுமரி வரை மின்சார வயர்கள் அமைக்கும் பணிகள் முடிவடைந்து விட்டன. குமரி முதல் சென்னை வரை அனைத்து ரயில்களும் மின்சாரம் மூலம் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கான பணிகள் அனைத்தும் விரைவில் முடியும். அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் இந்த வழிப்பாதையில் ரயில்கள் அனைத்தும் மின்சாரம் மூலம் இயக்கப்படும் என்றார்.

5 ஆண்டுகள் தாமதம்
செங்கோட்டை- புனலூர் இடையே அகல ரயில்பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த திட்டத்திற்கு சுமார் 300 கோடி ரூபாய் தேவைப்படுகிறது. தற்போது சொற்ப அளவிலேயே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நிதி ஒதுக்கப்பட்டதும் பணிகள் நடக்கும். மலைப்பகுதி என்பதால் பணிகள் மெதுவாகவே நடக்கும். இந்த திட்டம் முடிய சுமார் நான்கு ஆண்டுகளுக்கு மேல் ஆகும் என்றார்.

காற்றாலை அமைக்க
இன்டக்ரல் கோச் பேக்டரி (ஐ.சி.எப்.,) சார்பில் அமைக்கப்பட்டுள்ள காற்றாலை மூலம் போதுமான அளவில் மின்சாரம் கிடைக்கிறது. தெற்கு ரயில்வேயும் விரைவில் காற்றாலை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளும்.

இரட்டை ரயில்பாதை
மதுரை முதல் நெல்லை வரையிலான இரட்டை ரயில்பாதை அமைக்க போதுமான நிதி இல்லை. ரயில்வே நிர்வாகம் நிதிச்சுமையில் இருப்பதால் நிதி ஒதுக்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த பணிகள் தாமதம் ஆகும் என்றார் பொதுமேலாளர் ராகேஷ் மிஸ்ரா.
-
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க!












Click it and Unblock the Notifications