ரோட்டில் பைக் ரேஸ் போன இளைஞர்கள்: சாலையில் சென்ற பெண் படுகாயம்
சென்னை: சென்னை மீனம்பாக்கம் அருகே பைக் ரேசில் ஈடுபட்ட இளைஞர் ஒருவரின் வாகனம் மோதி சாலையில் சென்று கொண்டிருந்த பெண் படுகாயம் அடைந்தார்.
சென்னையில் போலீஸாரின் தடை மற்றும் தீவிரக் கண்காணிப்பையும் மீறி இளைஞர்கள் பைக் ரேஸ் நடத்துவது அதிகரித்து வருகிறது. அதிவேகமாக ஓட்டப்படும் பைக்குகள் மோதியும், கீழே விழுந்தும் பலர் பலியாகியுள்ளனர். ஆனாலும் இதை இளைஞர்கள் தொடரத்தான் செய்கிறார்கள்.
இந்த நிலையில் சென்னை மீனம்பாக்கம் அருகே 8 பேர் பைக் ரேசில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அப்போது கட்டுப்பாட்டை இழந்த பிரபு என்ற இளைஞரின் பைக், சாலை தடுப்பில் மோதி தூக்கி வீசப்பட்டது.

இதில் அந்த இளைஞரும், சாலையில் சென்று கொண்டிருந்த முத்துலெட்சுமி என்ற பெண்ணும் படுகாயம் அடைந்து, குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விமான நிலையம் அருகே போக்குவரத்து மிகுந்த சாலையில் பைக் ரேசில் ஈடுபட்ட இளைஞர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முத்துலெட்சுமியின் உறவினர் செய்தியாளர்களிடம் கூறும்போது, 8 பேர் பைக் ரேஸ் சென்றதாக தெரிகிறது. அப்போது சாலையில் சென்ற முத்துலெட்சுமி மீது ஒரு பைக் மோதியதில் அவரின் தலையில் அடிப்பட்டுள்ளது. காலில் இரண்டு இடங்களில் அடிபட்டுள்ளது. தற்போது எதுவும் சொல்ல முடியாது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் என்றார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications