திருவண்ணாமலை மாவட்டத்தில் 1.75 மாணவர்கள் ஒன்று திரண்டு தமிழ் புத்தகம் வாசித்து உலக சாதனை
1.75 லட்சம் மாணவர்கள் ஒரே நேரத்தில் தமிழ் படித்து உலக சாதனை படைத்தனர்.
Recommended Video

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் 1.75 லட்சம் மாணவர்கள் ஒரே நேரத்தில் தமிழ் வாசித்தும், எழுதியும் உலக சாதனை நிகழ்த்தினர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் 2,177 பள்ளிகள் உள்ளன. அதில் 2.75 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர்.

அவர்களில் 2-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் 85 ஆயிரம் மாணவர்கள், 90 ஆயிரம் மாணவிகள் என 1.75 லட்சம் மாணவர்களின் கல்வித் திறனை சோதித்து, தமிழ் படித்தல் திறனை ஆய்வு செய்து உலக சாதனை நிகழ்த்துவதற்கான முயற்சி இன்று நடைபெற்றது.
மாவட்ட நிர்வாகம், ரோட்டரி கிளப் சார்பில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. கலிபோர்னியாவில் ஒரே நேரத்தில் 75,000 பேர் புத்தகம் வாசித்து படைத்த சாதனை முறியடிக்கப்பட்டது
திருவண்ணாமலை நகராட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளியில்தான் இந்த நிகழ்வு இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தொடங்கிவைத்த இந்நிகழ்ச்சியில், மாவட்டமுழுவதும் 470 மையங்களில் மாணவர்கள் ஒன்று திரண்டு, ஒரே நேரத்தில் தமிழ் வாசித்தும், எழுதியும் சாதனை நிகழ்த்தியுள்ளனர்.
காலை 9.30 மணி முதல் 9.45 மணிவரை வாசிக்கும் நிகழ்ச்சியும், 9.45 மணி முதல் 9.50 மணிவரை எழுதும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இந்த சாதனையை வீடியோவில் பதிவு செய்யப்பட்டதுடன், உலக சாதனையை பதிவு செய்யும் 7 அமைப்புகளும் இதனை நேரில் பார்வையிட்டனர்.
கடந்த 2003ம் ஆண்டு இதுபோன்ற சாதனை நிகழ்ச்சி கலிபோர்னியாவில் நடைபெற்றதாம். ஆனால் திருவண்ணாமலையில் மாணவர்கள் இன்று நிகழ்த்திய சாதனை அதை முறியடிக்கும் வகையில் அமைந்துவிட்டது.
ஒவ்வொருவருக்கும் தங்களது தாய் மொழி வழி கல்விதான் சிறப்பையும் ஆற்றலையும் தரக்கூடியது, அத்துடன், தாய்மொழியில் படிப்பதால்தான் சிந்தனை திறனை, கற்பனை சக்தி அதிகரிக்க வழிஉண்டு என்பதால், தமிழ் வாசித்தல் நிகழ்வை அடிப்படையாக கொண்டு இந்த உலக சாதனை முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது,
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications