அடுத்த குண்டு.. கோயம்பேட்டில் 4 ஏக்கர் நிலம் அபகரிப்பு.. ரவி பச்சமுத்துக்கு எதிராக வழக்கு
சென்னை: எஸ்ஆர்எம் குழும தலைவர் பச்சமுத்துவின் மகன், ரவி பச்சமுத்து கோயம்பேட்டிலுள்ள தனது 4 ஏக்கர் நிலத்தை அபகரித்துவிட்டதாக கூறி சென்னையை சேர்ந்த ஒருவர் ஹைகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
மாணவர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு மோசடி செய்ததாக எஸ்ஆர்எம் குழும தலைவர் பச்சமுத்து சில தினங்கள் முன்பு கைது செய்யப்பட்டார். இந்நிலையில், அவரது மகன் ரவி பச்சமுத்து மீது நில ஆக்கிரமிப்பு புகார் எழுந்துள்ளது.

சென்னை, ஏழுகிணறு பகுதியை சேர்ந்த மாதவராவ் என்பவர், ஹைகோர்ட்டில் தொடர்ந்த மனுவில், கோயம்பேடு பகுதியில் தனக்கிருந்த 4 ஏக்கர் நிலத்தை ரவி பச்சமுத்து அபகரித்து கொண்டதாகவும், இதுகுறித்து கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தபோதும், போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் 4 பேருக்கு சொந்தமான நிலத்தையும் ரவி பச்சமுத்து அபகரித்துள்ளதாகவும், தனது மனுவில் மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications