தமிழக மீனவர்கள் 33 பேர் கைது: இலங்கை கடற்படை அட்டூழியம்!

Subscribe to Oneindia Tamil

நாகப்பட்டினம்: நடுக்கடலில் மீன்பிடித்த தமிழக மீனவர்கள் 33 பேரை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெடுந்தீவு - காரை நகர் இடையே மீன்பிடித்தபோது 5 படகுகளில் வந்த இலங்கை கடற்படையினர் 33 பேரையும் கைது செய்து சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாகப்பட்டிணத்தைச் சேர்ந்த மீனவர்கள் 33 பேரும், 5 படகுகளில் மீன்பிடிக்கச் சென்றனர். நெடுந்தீவுக்கும், காரை நகருக்கும் இடையே நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, இலங்கை கடற்படை அவர்களை சுற்றி வளைத்தது. பின்னர் மீனவர்கள் 33 பேரையும், 5 படகுகளையும் சிறை பிடித்தனர். அவர்கள் அனைவரும் காங்கேசன்துறைக்கு கொண்டு செல்லப்படுவதாக தெரியவந்துள்ளது. இத்தகவலை படகில் இருந்த மீனவர்களில் ஒருவர் நாகையில் உள்ள தங்கள் உறவினர்களுக்கு தொலைபேசி மூலம் தெரிவித்துள்ளார்.

Lankan Navy arrests 33 TN fishermen

எல்லை தாண்டி மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களை கைது செய்யலாம் என்று இலங்கை அதிபர் சிறிசேனா உத்தரவிட்ட 24 மணி நேரத்திற்குள் இந்திய மீனவர்களை அந்நாட்டு கடற்படை கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+