கச்சத்தீவு அருகே விரட்டியடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள்.. வலைகளை அறுத்து இலங்கை படை வெறியாட்டம்
ராமேஸ்வரம்: கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டியடித்தனர். மீனவர்களின் வலைகளையும் அவர்கள் அறுத்தெறிந்ததால் மீனவர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
ராமேஸ்வரத்தை சேர்ந்த சுமார் 3000 மீனவர்கள் 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் நேற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். காற்றின் வேகம் கடல் அலையின் சீற்றம் ஆகியவை அதிகமாக இருந்தது. இருப்பினும் மீனவர்கள் அதனை சமாளித்து நடுக் கடலில் மீன் பிடித்து கொண்டுருந்தனர்.

சில படகுகள் கச்சத்தீவு அருகே மீன் பிடிக்கும் பணியில் ஈடுபட்டன. அப்போது அங்கு இலங்கை கடற்படையினர் ரோந்து கப்பல்களில் வந்தனர். அவர்கள் இங்கு மீன் பிடிக்கக்கூடாது உடனே கிளம்புங்கள் என எச்சரித்துள்ளனர். இதனை கேட்ட மீனவர்கள் அவசர, அவசரமாக அங்கிருந்து புறப்பட்ட தயாரானார்கள். இந்த நேரத்தில் இலங்கை கடற்படையினரில் சிலர் மீனவர்களின் படகுகளுக்கு வந்து அவர்களை தாக்கி விரட்டியடித்தனர். மேலும் மீனவர்களின் வலைகளையும் அறுத்து வீசினர்.
இதைத் தொடர்ந்து தமிழக மீனவர்கள் வேகம் வேகமாக அங்கிருந்து தப்பி ஓடி வந்து விட்டனர். இலங்கைப் படையினர் இப்படி தொடர்ந்து அட்டூழியம் செய்து வருவது தமிழக மீனவர்களிடையே பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications