சேலத்தில் பயங்கரம்.. இலங்கைப் பெண்ணின் கழுத்தை அரிவாளால் அறுத்த மாஜி காதலன்..!
சேலம்: சேலத்தில் திருமணமாகி 2 மாதங்களே ஆன பெண்ணின் கழுத்தை அவரது மாஜி காதலன் கத்தியால் அறுத்த செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் தாரமங்கலத்தில் இலங்கைத் தமிழர்களுக்கான மறு வாழ்வு முகாம் உள்ளது. இங்கு தங்கியிருப்பவர் நிகாசினி. 19 வயதான இவருக்கு 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஆனால் திருமணத்திற்கு முன்பு வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 30 வயதான சந்திரசேகர் என்பவரைக் காதலித்துள்ளார் நிகாசினி. ஆனால் இது கை கூடவில்லை.

இந்த நிலையில் நிகாசினி வசிக்கும் வீட்டுக்கு வந்த சந்திரசேகர், அவருடன் தனியாகப் பேச வேண்டும் என்று கூறி கூப்பிட்டுள்ளார். அவரை நம்பி நிகாசினியும் போயுள்ளார். பின்னர் தனியான இடத்தில் வைத்து தான் கொண்டு வந்த அரிவாளால் நிகாசினியின் கழுத்தை அறுத்துள்ளார் சந்திரசேகர். அவரிடமிருந்து தப்பிக்க முயன்று கதறித் துடித்தார் நிகாசினி.
சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்களிடம் சந்திரசேகர் சிக்கிக் கொண்டார். நிகாசினி மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
சுவாதி படுகொலை சம்பவத்தின் துயரமே ஆறாத நிலையில் கிட்டத்தட்ட அதே போல ஒரு சம்பவம் நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications