ஜெ. நினைவிடத்தில் 6வது நாளாக குவியும் கண்ணீர் அஞ்சலி... மாஜி அமைச்சர்கள் உட்பட 1000 பேர் மொட்டை!
முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் 6வது நாளாக அஞ்சலி செலுத்தி வருகின்றனர். முன்னாள் அமைச்சர்கள் உட்பட 1000 பேர் அங்கு மொட்டையடித்தும் அஞ்சலியை காணிக்கை
சென்னை: மெரினா கடற்கரையில் ஜெயலலிதாவின் நினைவிடத்தை காண ஏரளாமான பொதுமக்களும் அதிமுக தொண்டர்களும் குவிந்து வருகின்றனர். அவர்கள் மொட்டையடித்து தங்களின் அஞ்சலியை செலுத்தி வருகின்றனர்.
முதல்வர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்பப்பட்டார். அவருக்கு சென்னை அப்பல்லோ மருத்துவர்கள் குழு, லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பீலே, டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் மற்றும் சிங்கப்பூர் மருத்துவர்கள் சிகிச்சையளித்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த திங்கட் கிழமை இரவு சிகிச்சைப்பலனின்றி முதல்வர் காலமானார். அவரது உடல் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்ஜிஆர் சமாதி வளாகத்தில் செவ்வாய்க்கிழமை மாலை நல்லடக்கம் செய்யப்பட்டது.

மக்கள் குவிகிறார்கள்
அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்தைக் காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான மக்கள் இன்று ஆறாவது நாளாக குவிந்து வருகின்றனர். ஆண்கள், பெண்கள், இளைஞர்கள் முதியவர்கள் என ஏரளாமானோர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

ஏக்கத்துடன் திரும்பும் தொண்டர்கள்
மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் குவிந்துள்ள மக்கள் நீண்ட வரிசையில் நின்று ஜெயலிதா புதைக்கப்பட்ட இடத்தில் அஞ்சலி செலுத்துகின்றனர். அவர்கள் தங்கள் தலைவி மீளாத்துயில் கொண்டுள்ள இடத்தை வெறுமையுடனுடம் மீண்டும் வரமாட்டேரே என்ற ஏக்கத்துடனும் கண்டு செல்கின்றனர்.

மொட்டையடித்து அஞ்சலி
வெளியூர்களில் இருந்து ஏராளமானோர் பஸ், வேன் என பல்வேறு வாகனங்களில் சென்னை மெரினா கடற்கரைக்கு வந்துள்ளனர். ஜெயலலிதா நினைவிடம் அருகிலேயே பெண்கள் உட்பட 1000க்கும் மேற்பட்டோர் மொட்டையடித்து முடி காணிக்கை செலுத்தினர்.

முன்னாள் அமைச்சர்களும் மொட்டை
முன்னாள் அமைச்சர்கள் செந்தமிழன், பச்சைமால் ஆகியோரும் ஜெயலலிதா நினைவிடத்தில் இன்று அஞ்சலி செலுத்தினர். பின்னர் நினைவிடம் அருகே அவர்கள் மொட்டையடித்து அஞ்சலி செலுத்தினர்.

கோவிலாகும் சாமதி
மொட்டையடிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் ஜெயலலிதாவின் சமாதி உள்ள பகுதி கோவில் போல காட்சியளிப்பதாக அக்கட்சியினர் தெரிவித்தனர்.

வணங்கி செல்லும் மக்கள்
ஜெயலலிதாவின் புகைப்படங்களுடன் நீண்ட வரிசையில் நின்று மக்கள் அஞ்சலி செலுத்துகின்றனர். ஜெயலலிதா புதைக்கப்பட்ட இடத்தில் கண்ணீர் அஞ்சலி செலுத்தும் அவர்கள் அங்கே விழுந்து வணங்கிச் செல்கின்றனர்.

மயக்கமடையும் பெண்கள்
ஏராளமான பெண்கள் கதறி அழுது மயக்கமடைந்தனர். அவர்களை போலீசார் மீட்டு தண்ணீர் தெளித்தனர். இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் அஞ்சலி செலுத்த வரும் மக்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது. கடந்த 5 நாட்களை விடவும் இன்று கூட்ட அதிகரித்துள்ளது. தொடர்ந்து கூட்டம் அதிகரிப்பதால் அங்கு பெருமளவில் போலீஸார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications