பூங்கோதைக்கு பரிசளிக்கப்பட்ட வேல்... ஆலங்குளத்தில் பரபரக்கும் இறுதிக்கட்ட பரப்புரை..!
தென்காசி: தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் பூங்கோதை ஆலடி அருணாவுக்கு அக்கட்சியை சேர்ந்த நிர்வாகி ஒருவர் 'வேல்' ஒன்றை பரிசாக அளித்திருக்கிறார்.
இன்று இரவு 7 மணியுடன் பிரச்சாரம் நிறைவடைய உள்ள சூழலில் ஸ்டார் தொகுதியான ஆலங்குளம் பரபரத்துக் காணப்படுகிறது. ஒரு புறம் பனங்காட்டுப்படை கட்சி வேட்பாளர் ஹரிநாடார் நடக்கும் நகைக்கடையாக வலம் வந்து தொகுதி மக்களை பிரமிக்க வைத்திருக்கிறார்.

மற்றொரு பக்கம் திமுக வேட்பாளரும், சிட்டிங் எம்.எல்.ஏ.வுமான பூங்கோதை ஆலடி அருணா, குக்கிராமம் விடாமல் பயணித்து தனது சாதனைகளையும், திமுக அளித்துள்ள தேர்தல் வாக்குறுதிகளையும் எடுத்துக்கூறி பெண்கள் மற்றும் புதிய வாக்காளர்களின் வாக்குகளை வளைத்திருக்கிறார்.
குறிப்பாக எந்தெந்த ஊர்களுக்கு பூங்கோதை பிரச்சாரம் செய்யச் செல்கிறாரோ, அந்த ஊரின் தேவைகளை அறிந்து அது தொடர்பான வாக்குறுதிகளை அளிப்பது அவருக்கு பிளஸ் பாயிண்டாக அமைந்துள்ளது. மாநில அரசியல், தேசிய அரசியல் பற்றி பேசாமல் உள்ளூர் பிரச்சனைகளை மக்களுக்கு நினைவுப்படுத்தி திமுகவுக்கான வாக்குகளை பூங்கோதை தக்க வைத்துக் கொள்கிறார்.
பூங்கோதை ஆலடி அருணாவின் வெற்றிவாய்ப்பு கருத்துக்கணிப்புகளில் உறுதியாகிய நிலையில், அவரது குடும்பத்தினர் சார்பில் வெளியிடப்பட்ட வீடியோ பெரியளவில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. இதற்கு காரணம் பூங்கோதையின் பிரச்சார அனுகுமுறை தான்.
இதனிடையே அதிமுக வேட்பாளர் மனோஜ்பாண்டியனுக்கு எதிரிகள் திமுகவில் யாரும் இல்லை. அவரது கட்சியான அதிமுகவிலேயே சிலர் உள்ளடி வேலைகளை பார்ப்பதை அறிந்து அவர் நொந்துகொண்டுள்ளார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications