வேட்டி கட்ட எப்படித் தடை விதிக்கலாம்... வழக்கு தொடுக்கிறார் வக்கீல் காந்தி
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை கிரிக்கெட் கிளப்புக்கு வேட்டி கட்டிச் சென்ற தன்னைத் தடுத்து நிறுத்தியதை எதிர்த்து வழக்குத் தொடர மூத்த வழக்கறிஞர் ஆர். காந்தி முடிவு செய்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், பேன்ட்தான் போட வேண்டும். வேட்டி கட்டி வரக் கூடாது என்றெல்லாம் விதிமுறைகள் வகுப்பது சட்ட விரோதமானது. இதை இன்று அனுமதித்தால் மொட்டை அடித்து வருபவர்களைத்தான் எங்கள் இடத்துக்குள் அனுமதிப்போம் என நாளை வேறொரு அமைப்பினர் விதிமுறை வகுக்க நேரிடும்.
எனவே வேட்டி அணிந்து வருபவர்களை உள்ளே விடமாட்டோம் என்று கிரிக்கெட் கிளப் வகுத்துள்ள விதிமுறையை ரத்து செய்ய கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளேன் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications