For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

'முரட்டு பக்தருக்கு' எதிராக வாதாடி சொத்துக்களை முடக்கிய வக்கீலுக்கு சீட் கொடுத்து அழகு பார்த்த ஜெ.

Google Oneindia Tamil News

தூத்துக்குடி: தூத்துக்குடியின் ஸ்டிராங் மேன் என்று நீண்ட காலமாக அழைக்கப்பட்டு வரும் திமுக மாவட்டச் செயலாளர் என்.பெரியசாமிக்கு எதிராக சொத்துக் குவிப்பு வழக்கில் வாதாடி, பெரியசாமியின் 12 வாகனங்களை சீஸ் செய்யக் காரணமாக இருந்த ஒரே காரணத்திற்காக தூததுக்குடி லோக்சபா தொகுதி வேட்பாளர் என்ற பரிசைப் பெற்றுள்ளார் அதிமுக வழக்கறிஞர் ஜெயசிங் தேவராஜ்.

இவர் தூத்துக்குடி நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றி வருகிறார். அரசு வக்கீலாகவும் இருந்துள்ளார். சாயர்புரம் போப் கல்லூரி செயலாளராகவும் இருக்கிறார். பல முக்கிய வழக்குகளில் ஆஜரான பெருமைக்குரியவர்.

jayalalitha and jayasiongh

கடந்த 2004 ஆம் ஆண்டு சொத்துக் குவிப்பு வழக்கில் திமுக மாவட்ட செயலாளர் என்.பெரியசாமிக்கு எதிராக வாதடியவர். பெரியசாமியின் 12 வாகனங்களையும், சொத்துக்களையும் முடக்கி வைக்க காரணமாக இருந்தவர். இதுதான் தற்போது அவருக்கு எம்.பி. சீட்டைப் பெற்றுத் தர முக்கியக் காரணமாக அமைந்துள்ளது.

சி.எஸ்.ஐ.டயோசிசன் தேர்தலில் வைகுண்டராஜனின் ஆதரவு பெற்ற எஸ்.டி.கே.ராஜன் அணிக்கு எதிராக டயமன்ட் சீ புட் அணியில் இடம் பெற்று போட்டியிட்டு வெற்றி பெற்றவரும் கூட.

ஜெயசிங்கின் பயோடேட்டா

முழுப் பெயர் - ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி.

வயது - 60

படிப்பு - எம்.ஏ., எல்எல்பி

தகப்பனார் பெயர்- ஜோசப்

மனைவி பெயர் - எமிமா அமல ராணி, ஓய்வுபற்ற பொறியாளர்.

மகள் பெயர் - சிமிர்னா ராகிதா.

மகன்கள் 2 - அண்டனி மாமல்லன், ஜோசப் சாமுவேல்.

சொந்த ஊர் - ராதாபுரம் தாலுகா, யாக்கோபுபுரம், நெல்லை மாவட்டம்.

தற்போதைய இருப்பு - வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு, எட்டையபுரம் சாலை, தூத்துக்குடி.

கட்சிப் பதவி - மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளர்.

இவரது தொலைபேசி எண் - 94431 32596

தென்காசிக்கு வெளியூர் வேட்பாளர்

இதற்கிடையே, தென்காசி தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள வசந்தி முருகேசன் முன்னாள் எம்பி. முருகேசனின் மனைவி ஆவார். கணவன்,. மனைவி இருவருமே தூத்துக்குடிக்காரர்கள் அல்ல. திருநெல்வேலியைச் சேர்ந்தவர்கள். ஆனால் தனித் தொகுதி என்பதால் இங்கு வசந்திக்கு சீட் தரப்பட்டுள்ளது.

English summary
An ADMK lawyer, Jayasingh, who appeared against DMK's Tuticorin secretary Periyasamy in DA case has been rewarded with a seat in LS election.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X