ஆங்கில புத்தாண்டு: விஜயகாந்த், தமிழிசை, சரத்குமார் வாழ்த்து
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த், பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் ஆகியோர் ஆங்கில புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வாழ்த்து செய்தி:
புதியதாய் பிறக்கும் 2017 வருடப் புத்தாண்டை மிகுந்த மகிழ்ச்சியோடு வரவேற்போம். சாதி, மதம், இனம், மொழி, வேறுபாடின்றி கொண்டாடி மகிழ்வோம். ஏழை, எளிய, நடுத்தர மக்களின் கஷ்டங்கள் நீங்கி, இருள் சூழ்ந்துள்ள அவர்களது வாழ்வில் கடவுள் அருளால் இன்றிலிருந்து ஒளிவெள்ளம் ஏற்படட்டும். எனது இதயப்பூர்வமான புத்தாண்டு தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

பாஜக மாநில தலைவர் தமிழிசை வாழ்த்துச் செய்தி:
தமிழிசை வெளியிட்டுள்ள புத்தாண்டு வாழ்த்து செய்தியில், பிரதமர் மோடியின் துணிச்சலான நடவடிக்கைகளால், கருப்பு பணம் ஒழிந்து, கருமை அகன்று, வெள்ளையும் வெளிச்சமும், பணத்திலும் மனதிலும், ஒளிரும் காலம் இந்த புத்தாண்டில் கனிந்து வருகிறது.
அனைத்து துன்பங்களும் அகன்று, அனைவருக்கும் மகிழ்ச்சியை அளிக்கும் ஆண்டாக இந்த ஆங்கிலப் புத்தாண்டு மலர வேண்டும், இந்தியா வளர வேண்டும் என்றும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
புதியதாய் பிறக்கும் 2017 வருடப் புத்தாண்டை மிகுந்த மகிழ்ச்சியோடு வரவேற்போம். சாதி, மதம், இனம், மொழி, வேறுபாடின்றி கொண்டாடி மகிழ்வோம். ஏழை, எளிய, நடுத்தர மக்களின் கஷ்டங்கள் நீங்கி, இருள் சூழ்ந்துள்ள அவர்களது வாழ்வில் கடவுள் அருளால் இன்றிலிருந்து ஒளிவெள்ளம் ஏற்படட்டும். எனது இதயப்பூர்வமான புத்தாண்டு தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வாழ்த்துச் செய்தி:
2016-ம் ஆண்டில் சோதனைகளையும், சாதனைகளாக்கி, 2017-ம் புதிய ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்த நேரத்தில் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த புதிய வருடத்தில் அனைத்து தமிழர்களுக்கும் புத்தாண்டு பரிசாக "ஜல்லிக்கட்டை நடத்த அனுமதி" வழங்க வேண்டும் என்று மத்திய அரசை கேட்டுக் கொள்கிறேன்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications