தேர்தல் முடிவு வருகையில் சிரிப்பது யார், அழுவது யார் என தெரியும்: தா. பாண்டியன்
திருப்பூர்: தேர்தல் முடிவு வரும்போது சிரிப்பது யார், அழுவது யார் என்று தெரியும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தா. பாண்டியன் தெரிவித்துள்ளார்.
திருப்பூரில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சுப்பராயனுக்கு ஆதரவாக பவானியில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் அக்கட்சியின் மாநில செயலாளர் தா. பாண்டியன் பேசினார்.

அப்போது அவர் கூறுகையில்,
சட்டசபை தேர்தலில் கம்யூனிஸ்டுகள், தேமுதிக ஆகிய கட்சிகள் ஒன்றாக சேர்ந்து தேர்தலை சந்தித்ததால் தான் ஜெயலலிதா வெற்றி பெற்று முதல்வர் ஆனார். தற்போதோ சிரித்துக் கொண்டே கூட்டணியில் இருந்து பிரிந்துவிடலாம் என்றார். அவர் பிரிந்து சென்றததை பற்றி ஒன்றும் கவலை இல்லை.
நாடாளுமன்ற தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சிகள் தனித்து விடப்படவில்லை. இது மண்ணோடும், மக்களோடும் கலந்த இயக்கம். மே 16ம் தேதி தேர்தல் முடிவு வரும்போது எங்களை விட்டு பிரிந்து சென்றவர்களுக்கு சிரிப்பது யார், அழுவது யார் என்பது தெரியும்.
முதலில் நான் தான் பிரதமர் என்று கூறினார் ஜெயலலிதா. ஆனால் தற்போது அதிமுக பங்குகொள்ளும் மத்திய அரசு அமையும் என்று கூறி வருகிறார். மத்தியில் யார் ஆட்சிக்கு வந்தால் பங்குகொள்வீர்கள் என்பதை ஜெயலலிதா தெளிவாக கூற வேண்டும் என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications