நெல்லையில் டாஸ்மாக் கடை சுவற்றில் ஓட்டை போட்டு மதுபானங்கள் ஆட்டை!
நெல்லை அருகே டாஸ்மாக் கடையில் துளை போட்டு மதுபாட்டில்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை: நெல்லை அருகே டாஸ்மாக் கடையில் துளை போட்டு மதுபாட்டில்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை அருகேயுள்ள ராதாபுரம் திருச்செந்தூர் மெயின் ரோட்டில் அரசு டாஸ்மாக் மதுக்கடை செயல்பட்டு வந்தது. தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் இருந்து மதுக்கடைகள் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி மூடப்பட்டன.

அதன்படி இந்த மதுக்கடையும் மூடப்பட்டு ராதாபுரம் செல்லும் சாலைக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் கடையை மூடிவிட்டு சென்ற கடை ஊழியர்கள் மீண்டும் கடையை திறக்க வந்த போது கடையின் பக்கவாட்டு சுவரில் துளை போடப்பட்டு இருப்பதை பார்த்த அதிர்ந்தனர்.
மேலும் கடையில் இருந்த விலை உயர்ந்த 339 மது பாட்டில்கள் திருடி போய் இருப்பதை பார்த்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதன் மதிப்பு ரூ.60 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது.
இதுகுறித்து கடை மேற்பார்வையாளர் ராமர்பாண்டியன் ராதாபுரம் போலீஸில் புகார் செய்தார். எஸ்ஐ சிவசங்கரன் மற்றும் போலீசார் கொள்ளை நடந்த டாஸ்மாக் மதுக்கடையை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் வழக்கு பதிந்து டாஸ்மாக் கடையில் துளை போட்டு திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இந்த திருட்டு சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications