காலை 7.15 மணிக்கு சென்ட்ரலில் வெடித்த குண்டு… அந்த பரபரப்பான நிமிடங்கள்
சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்று காலை நிகழ்ந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் பெண் ஒருவர் உயிரிழந்தார்.14 பேர் பலத்த காயமடைந்துள்ளனர்.
தமிழ்நாடு முழுவதும் அதிர்ச்சியலைகளை உருவாக்கியுள்ள இந்த சம்பவத்தை தொடர்ந்து பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு ரயில் வந்தது தொடங்கி இப்போது வரை பரபரப்பான சம்பவங்கள் அரங்கேறியுள்ளன.

காலை 7.05: பெங்களூர் - கவுகாத்தி ரயில் சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தது
காலை 7.15: 9 வது பிளாட்பாரத்தில் நின்றிருந்த ரயிலின் எஸ் - 4 எஸ் -5 ஸ்லீப்பர் பெட்டியில் பலத்த வெடிச்சத்தம் கேட்டது.
காலை 7.20 : வெடிச்சத்தம் கேட்ட உடன் ரயில் பெட்டியில் இருந்த பயணிகளும், அலறியடித்துக்கொண்டு ஓடினர்.
காலை 7.30 : சம்பவ இடத்திற்கு ரயில்போலீசார், பாதுகாப்பு போலீசார் உடனடியாக விரைந்தனர். பயணிகளை மீட்கும் பணியில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.
காலை 8 மணி : சென்னைக்கு வரும் அனைத்து ரயில்களும் நிறுத்தப்பட்டது. சென்ட்ரல் ரயில் நிலையம் முற்றிலும் பாதுகாப்பு வளையத்திற்கு கொண்டுவரப்பட்டது.
காலை 8.15 மணி: குண்டு வெடிப்பில் பெண் ஒருவர் உயிரிழந்தார் பலர் படுகாயமடைந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
காலை 8.30 மணி : தமிழகம் முழுவதும் அனைத்து ரயில் நிலையங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
காலை 8.35 : தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ரகேஸ் மிஷ்ரா ஆய்வு செய்தார். குண்டு வெடிப்புக்கு கண்டனம் தெரிவித்த அவர், உயிரிழந்த பெண்ணிற்கு இரங்கல் தெரிவித்தார்.
காலை 9 மணி : குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு உள்துறை அமைச்சகம் கண்டனம் தெரிவித்தது. என்.எஸ்.ஜி. கமாண்டோ படை சென்னைக்கு அனுப்பி வைக்கப்படும் என்று உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷின்டே தெரிவித்தார்.
காலை 9.30 மணி: ரயிலின் கழிவரையில் ஒளிந்து கொண்டிருந்த நபரை பிடித்து விசாரணைக்கு அழைத்து சென்றனர்.
காலை 9.45 மணி : தமிழக டிஜிபி ராமனுஜம் குண்டு வெடித்த ரயில் பெட்டியை ஆய்வு செய்தார்.
10.30 மணிக்கு குண்டு வெடிப்பு வழக்கு ரயில்வே போலீசாரிடம் இருந்து சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.
10.35 மணி: கலெக்டர் சுந்தரவள்ளி அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் ஆய்வு... உச்சக்கட்ட மருத்துவசதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்.
10.45 மணி : உயிரிழந்த சுவாதிக்கு அமைச்சர் வளர்மதி அஞ்சலி செலுத்தினார்.
11.00 மணி : குண்டு வெடித்த பெட்டிகளைத் தவிர மற்ற பெட்டிகளுடன் பெங்களூர் - கவுகாத்தி ரயில் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட தயாராகி வருகிறது.
காலை 11.30 மணி: வெடிக்கப்பட்ட குண்டு எத்தகையது என்று வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர ஆய்வு மேற்கொண்டனர்.
பிற்பகல் 12.10 மணி: பெங்களூர் - கவுகாத்தி ரயில் கூடுதல் பாதுகாப்புடன் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து கவுகாத்தி நோக்கி தனது பயணத்தை தொடங்கியது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications