இப்ப என்ன அவசரம்... உள்ளாட்சி தேர்தலின் போது கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படும் - வைகோ
சென்னை: உள்ளாட்சி தேர்தலின் போது கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படும் என மதிமுக பொதுச் செயலாளரும் மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளருமான வைகோ தெரிவித்துள்ளார்
நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி - த.மா.கா இணைந்து எதிர்க்கொண்டது. இந்த கூட்டணி போட்டியிட்ட அனைத்து தொகுதியிலும் தோல்வியைத் தழுவியது. உளுந்தூர்பேட்டை தொகுதியில் போட்டியிட்ட தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டு டெபாசிட் இழந்தார். விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் மட்டும் குறைந்த வாக்குவித்தியாசத்தில் தோல்வியுற்றார்.

இதனையடுத்து, தேர்தல் தோல்வி தேமுதிக நிர்வாகிகளுடன் அக்கட்சி தலைவர் விஜயகாந்த் தீவிர ஆலோசனை மேற்கொண்வருகிறார். இதனிடையே மக்கள் நலக் கூட்டணியில் இருந்து வெளியே வருமாறு தேமுதிக நிர்வாகிகள் குரல் கொடுத்து வருவதாக செய்திகள் வெளியாகின. அதேபோல் வரும் உள்ளாட்சி தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது.
இந்நிலையில், உள்ளாட்சி தேர்தலின் போது கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, தேர்தலின் போது தேமுதிக-மக்கள் நலக் கூட்டணி-தமாகா இடையே தொகுதி உடன்பாடு ஏற்பட்டது.
உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக, தமாகா தனித்து போட்டியிடுவதில் தவறு ஏது்ம் இல்லையே. இருப்பினும் தேமுதிக, த.மா.கா. வுடன் மக்கள் நலக் கூட்டணி தொடர்ந்து நட்பு பாராட்டப்படும் என்று கூறினார். மேலும், உள்ளாட்சி தேர்தலின் போது கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படும். கச்சத்தீவு விவகாரத்தில் 2 கட்சிகளின் விவாதங்களும் அவர்களது நிலைப்பாட்டை தெளிவுபடுத்திவிட்டது என்றார்.
-
காவி வண்ணத்தில் வள்ளுவர்., ஆளுநர் செய்தது அயோக்கியத்தனம்! வெடித்துக் கிளம்பிய வைகோ! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications