‘முதல் கையெழுத்து’ போடுவோம் என்ற நம்பிக்கையை அன்புமணி இழந்து விட்டார்: ஸ்டாலின்
கடலூர்: நமக்கு நாமே பயணத்திற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு இருப்பதாகத் தெரிவித்துள்ளார் திமுக பொருளாளர் ஸ்டாலின். இதனால், பாமகவின் முதலமைச்சர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ், தனது நம்பிக்கையை இழந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
திமுக பொருளாளர் ஸ்டாலின் நமக்கு நாமே பயணத் திட்டத்தை மேற்கொண்டு வருகிறார். முதல் கட்ட பயணத்தை கடந்த நவம்பர் 20-இல் கன்னியாகுமரியில் தொடங்கி 11 மாவட்டங்கள் வழியாக திருச்சியில் அக்டோபர் 2-இல் நிறைவு செய்தார். இரண்டாம் கட்ட பயணத்தை அக்டோபர் 7-இல் நீலகிரியில் தொடங்கி 12-வது மாவட்டமாக ஞாயிற்றுக்கிழமை கடலூரில் நிறைவு செய்தார்.

தனது நமக்கு நாமே பயணத்திற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு இருப்பதாகத் தெரிவித்துள்ளார் ஸ்டாலின். இது தொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அவர் அளித்துள்ள பேட்டியில், ‘தனது சுற்றுப் பயணத்திற்கு மக்களிடையே வரவேற்பு கிடைத்திருப்பதால் மற்ற அரசியல் கட்சிகள் கவலையடைந்துள்ளதாக' கூறியுள்ளார்.
மேலும், இந்தச் சுற்றுப்பயணத்திற்கு நமக்கு நாமே என்று திமுக தலைவர் கருணாநிதி தான் பெயர் வைத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
அதோடு, தனது இந்தச் சுற்றுப்பயணத்தால் பாமகவின் முதலமைச்சர் வேட்பாளரான அன்புமணி ராமதாஸ், முதலமைச்சராகி முதல் கையெழுத்து போடுவோம் என்ற நம்பிக்கையை இழந்துள்ளதாகவும் ஸ்டாலின் கூறியுள்ளார்.
ஏற்கனவே, அன்புமணி ராமதாஸுக்கும், ஸ்டாலினுக்கும் இடையே அறிக்கைகள், பேட்டிகள் மூலம் ஊடகங்கள் வாயிலாக சொற்போர் நடந்தது நினைவு கூறத்தக்கது. இந்நிலையில், ஸ்டாலின் அன்புமணி ராமதாஸின் ‘முதலமைச்சர்' நம்பிக்கை தகர்ந்து விட்டதாக கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
-
கூட்டணி கட்சிகளுக்குள் வெடித்த கலவரம்: திமுக - விசிக இடையே பயங்கர கல்வீச்சு! தடியடி நடத்திய போலீசார் -
சென்னையில் மின்வெட்டின் பின்னணி.. அமைச்சர் கருத்துக்கு திமுக தொழிற்சங்கம் திட்டவட்டமாக மறுப்பு -
CM Saar.. மாறி மாறி மக்களை ஏமாற்றும் விஜய்.. SCAM செய்யும் தவெக அரசு.. உதயநிதி ஸ்டாலின் அதிரடி! -
பொய் சொல்றாங்க..ஸ்டாலின் கூறியதற்கும், திமுக செய்வதற்கும் சம்பந்தமில்லை! வெளுத்துவிட்ட மா.கம்யூ -
தலைமைச் செயலகத்தை தவெக கட்சி அலுவலகமாக மாற்றுவதா? திமுக எம்பி வில்சன் கண்டனம் -
கைய குடுங்க பங்கு.. விஜய்ய முடிச்சு விடனும்! திரைமறைவில் கைகோர்த்த திமுக -அதிமுக! உடைந்த கூட்டணிகள்! -
ஸ்டாலின் மாஸ்டர் பிளான்.. திமுகவை டோட்டலாக ரீவேம்ப் செய்கிறாரா? கூட்டணி கட்சிகளுக்கு பெரிய ஆப்புதானா -
ஃபேக் நியூஸ்.. தூக்கம் தொலைத்த திமுக நிர்வாகிகள்.. களம் இறங்கிய திமுக தலைமை.. வில்சன் எம்பி அதிரடி -
குதிரை வேகத்தில் குதிரை பேரம்! இந்த கண்றாவி காட்சியை பார்க்கத்தான் ஓட்டு போட்டார்களா? -மு.க.ஸ்டாலின் -
திமுகவிற்கு குட்பையா? தனிச்சின்னத்தில் போட்டியிட துடிப்பது ஏன்? சர்ச்சைக்கு நடுவே விளக்கிய ஜவாஹிருல்லா -
தூய சக்தி என்றால் 3 எம்.எல்.ஏக்களையும் கட்சியை விட்டு நீக்கணும்.. விஜய்க்கு அன்புமணி வைத்த வேண்டுகோள் -
வாட் ப்ரோ.. இட்ஸ் வெரி ராங் ப்ரோ! திராவிட மாடல் 2.0 ஆட்சி தான் தவெக! அடித்து துவைத்த அர்ஜுன் சம்பத்












Click it and Unblock the Notifications