வஜ்ரா வாகனம், கண்ணீர் புகைக்குண்டு, துப்பாக்கி, லத்தியுடன் காவேரி மருத்துவமனையில் குவிந்த போலீசார்
சென்னை: காவேரி மருத்துவமனை முன்பு கண்ணீர் புகைக்குண்டு, துப்பாக்கி, லத்தியுடன் போலீசார் இறக்கப்பட்டுள்ளனர்.
திமுக தலைவர் கருணாநிதி சிகிச்சை பெற்று வரும் சென்னை காவேரி மருத்துவமனையில் ஏராளமான தொண்டர்கள் குவிந்துள்ளனர்.

கருணாநிதியின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது என தகவல் வெளியானதை தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தொண்டர்கள் குவிந்து வருகின்றனர்.
இதனால் காவேரி மருத்துவமனை அமைந்துள்ள ஆழ்வார்ப்பேட்டை பகுதி முழுவதும் மனித தலைகளாக காட்சியளிக்கிறது.
கூட்டம் கட்டுக்கடங்காமல் செல்வதால் மருத்துவமனை வளாகத்தின் முன்பு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் மருத்துவமனை முன்பு வஜ்ரா வாகனம் கொண்டு வரப்பட்டுள்ளது.
கண்ணீர் புகைக்குண்டு, துப்பாக்கி, லத்தியுடன் காவேரி மருத்துவமனையில் போலீசார் குவிந்துள்ளனர். மேலும் அதிரடிப்படையினரும் மருத்துவமனை முன்பு குவிந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications