மோசமான போன் அழைப்புகள், இணையவழி தொந்தரவுகள்... போலீசில் கவிஞர் தாமரை புகார்!!
சென்னை: தமக்கு மோசமான போன் அழைப்புகள், அச்சுறுத்தல்கள், இணையவழி தொந்தரவுகள் இருப்பதால் போலீசில் புகார் செய்வதாக திரைப்படப் பாடலாசிரியரான கவிஞர் தாமரை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமது ஃபேஸ்புக் பக்கத்தில் கவிஞர் தாமரை எழுதி இருப்பதாவது:
நான் தற்சமயம் சென்னைப் பெருநகர ஆணையாளர் அலுவலகத்தில் இருக்கிறேன்.

கடந்த சில மாதங்களாகவே எனக்கு மோசமான தொலைபேசி அழைப்புகள், அச்சுறுத்தல்கள், இணைய வழித் தொந்தரவுகள் இருந்து வருகின்றன.
நீண்ட பொறுமைக்குப் பிறகு இன்று வெளிப்படையாகப் புகார் கொடுப்பதென்று முடிவெடுத்தேன்.
தியாகு வீட்டை விட்டு ஓடிய பிறகு, நான் துணிந்து வெளியில் வந்து நியாயம் கேட்டுப் போராடியதன் பின்விளைவுதான் இது. அதாவது சமூகத்தின் பார்வையில் நான் தனியாக இருக்கிறேன் , என்னை எப்படி வேண்டுமானாலும் அணுகலாம் என்கிற வக்கிரமான மனநிலைதான் !. இப்படி என்னை அச்சுறுத்துவதன் மூலம் கணவர்களின் அக்கிரமங்களை எதிர்த்துக் கேள்வி எழுப்பும் அனைத்துப்பெண்களுக்கும் எச்சரிக்கை விடப்படுவதாகவே கருதுகிறேன். இந்த வகையான ஆபாச அச்சுறுத்தல்கள் எப்பேர்ப்பட்ட பெண்ணையும் நிலைகுலையச் செய்வது இயல்பே !
இப்படியான நிலை சமூகத்தில் இருப்பதால்தான் பெரும்பாலான பெண்கள் வாய்மூடி மௌனிகளாய் இருக்கிறார்கள்.
என் புகாரில் குற்றவாளிகளைக் கண்டுபிடித்துத் தண்டனை கொடுத்தால் அது மற்ற பெண்களுக்கு ஊக்கமாக இருக்கும் என்று நினைத்தே புகார் கொடுக்கிறேன்.
(எனக்கும் என் மகனுக்கும் பாதுகாப்பு கொடுக்குமாறு காவல்துறையிடம் வேண்டுகோள் விடுத்துள்ளேன்).
இவ்வாறு கவிஞர் தாமரை கூறியுள்ளார்.
-
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications