அழைப்பிற்கு மரியாதை.. ஜல்லிக்கட்டை காண அலங்காநல்லூர் செல்வேன்.. மு.க. ஸ்டாலின்
கிராம மக்கள் அழைப்பிற்கு மரியாதை அளிக்கும் வகையில் ஜல்லிக்கட்டு போட்டியைக் காண அலங்காநல்லூர் செல்வேன் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை: மாணவர்கள், இளைஞர்கள், மாணவிகள், பெண்கள் என அனைத்து தரப்பினரும் முழு மூச்சாய் நின்று பெரும் போராட்டத்தை நடத்திய பின்னர் ஜல்லிக்கட்டு தமிழ் நாட்டில் நடந்து வருகிறது. அதில் உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழாவில் கலந்து கொள்ளப் போவதாக திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மாணவர்களின் புரட்சிப் போராட்டத்தையடுத்து தமிழக அரசு ஜல்லிக்கட்டிற்கான சட்டத்தை இயற்றியுள்ளது. இதனால் தமிழகத்தில் இரண்டு ஆண்டுகளாக நடத்த முடியாமல் இருந்து ஜல்லிக்கட்டு தற்போது ஆங்காங்கே நடந்து வருகிறது. அந்த வகையில் வரும் 10ம் தேதி அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழா நடைபெற உள்ளது.

இந்த விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்று அலங்காநல்லூர், பாலமேட்டு கிராம மக்கள் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தனர். அப்போது ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டும் என போராட்டம் நடத்தியதற்கும் ஸ்டாலினுக்கு கிராம மக்கள் நன்றி தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், ஜல்லிக்கட்டு போட்டியை காண அலங்காநல்லூர் செல்வேன் என கூறினார்.
-
பரந்தூர்-க்கு சொன்ன நோ.. சென்னை மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! சீட்டுக்கட்டுப்போல் சரியும் மெகா திட்டங்கள்! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்!












Click it and Unblock the Notifications