ஆர்கே நகரில் ஆறு ஆண்டுகளில் அதிமுக செய்தது என்ன? 'நமக்கு நாமே' சந்திப்பில் ஸ்டாலின் காட்டம்!
ஆர்கே நகரில் கடந்த ஆறு ஆண்டுகளில் அதிமுக மக்களுக்கு செய்தது என்ன என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.
சென்னை: சென்னை ஆர்கே நகர் தொகுதியில், திமுக செயல் தலைவர் மு.க ஸ்டாலின் 'நமக்கு நாமே' திட்டம் மூலம் மக்களை சந்தித்து வருகிறார். அப்போது, அதிமுக ஆறு ஆண்டுகளில் ஆர்கே நகர் தொகுதி மக்களுக்கு என்ன செய்தது? என கேள்வி எழுப்பினார்.
ஆர்கே நகரில் இடைதேர்தல் நடப்பதற்கு இன்னும் வெறும் ஒன்பது நாட்களே உள்ள நிலையில் அங்கு அனைத்துக் கட்சியினரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ஆர்கே நகர் தொகுதிக்குட்பட்ட திருவொற்றியூரில் தனியார் திருமண மண்டபம் ஒன்றில் 'நமக்கு நாமே' சந்திப்பில் திமுக செயல்தலைவர் மு.க ஸ்டாலின் மக்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய மு.க ஸ்டாலின், 'கடந்த ஆறு ஆண்டுகளாக ஆர்கே நகர் தொகுதிக்கு அதிமுக என்ன திட்டங்களைச் செய்தது? மறைந்த முதல்வர் ஜெயலலிதா 110 விதியின் கீழ் சட்டமன்றத்தில், பல திட்டங்களை அறிவித்தார். ஆனால், அதில் என்ன திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது.
திமுக ஆட்சியில் ஆர்கே நகர் தொகுதியில் பல்வேறு திட்டங்கள் செய்யப்பட்டன. மீனவர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தியுள்ளோம். ஆகையால், திறமையும் உழைக்கக்கூடியவருமான மருது கணேஷுக்கு வாக்களிக்க வேண்டும்' என்றார்.
மேலும் திமுக வெற்றி பெற்றால், ஆஸ்பெஸ்டாஸ் சீட் வேய்ந்த வீடுகளை மாடி வீடுகளாகக் கட்டித் தருவோம் என்றும் மக்களிடம் வாக்குறுதி அளித்தார் ஸ்டாலின்.
கடந்த சட்டசபைத் தேர்தலின்போது, மு.க ஸ்டாலின் 'நமக்கு நாமே' என்ற செயல்திட்டத்தின் மூலம் மக்களைச் சந்தித்தார். அப்போது அவர் யூத்ஃபுல்லாக ஆடை அணிந்திருந்தார். ஆனால் இன்றைய 'நமக்கு நாமே'-வில் எப்போதும் அணியும் வேட்டி சட்டையே அணிந்திருந்தார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications