ம.தி.மு.க.வை உடைக்க ஒரு மாதம் முன்பிருந்தே திட்டமிட்டார் மு.க.ஸ்டாலின்.. வைகோ பரபரப்பு குற்றச்சாட்டு
சென்னை : ம.தி.மு.க. மாவட்ட செயலாளர்களை தன்வசம் இழுக்கும் முயற்சியில் ஒரு மாதத்திற்கு முன்பிருந்தே மு.க.ஸ்டாலின் ஈடுபட்டதாக ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ பரபரப்பு குற்றம்சாட்டியுள்ளார்.
ம.தி.மு.க. மாவட்ட நிர்வாகிகளின் கூட்டம் இன்று (சனிக்கிழமை) அக்கட்சியின் தலைமை அலுவலகமான தாயகத்தில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அக்கட்சியின் உயர்நிலைக்குழுக் கூட்டம் நடைபெற்றது.

அக்கட்சியின் அவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் வைகோ பேசியதாவது...
எங்கள் இயக்கத்தில் இருந்து அண்மையில் விலகிச் சென்ற கழகப் பொருளாளர் டாக்டர் மாசிலாமணியின் விழுப்புரம் மாவட்டத்தில் இருந்தும், சேலம் மாவட்டத்தில் இருந்தும், காஞ்சி மாவட்டத்தில் இருந்தும் ஏராளமான தோழர்கள் அங்கு கூட்டங்கள் நடத்தி அந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை கொண்டு வந்தார்கள். அவர்களை சந்தித்தப் பிறகுதான் நாங்கள் உயர்நிலைக் குழு கூட்டத்தை ஆரம்பித்தோம்.
ம.தி.மு.க. ஒரு முக்கியமான காலக்கட்டத்தில் உங்களை சந்திக்கிறது. இந்த இயக்கத்தின் உயர்நிலைக் குழுக் கூட்டம் கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி கூட்டப்பட்டு, அதனைத் தொடர்ந்து மாவட்டச் செயலாளர்கள் கூட்டமும் நடைபெற்ற பின்னர் எடுக்கப்பட்ட முடிவுகள் தீர்மானமாக அறிவிக்கப்பட்டன.
இங்கு எடுக்கப்பட்ட முடிவுகளைத்தான் மாநாட்டில் என்னுடைய உரையில் தெரிவித்து, தி.மு.க.வுடனும், அ.தி.மு.க.வுடனும் எக்காரணத்தைக் கொண்டும் கூட்டணி அமைப்பதில்லை. மக்கள் நலக் கூட்டியக்கத்தை முன்னெடுத்துச் செல்வது என்று மாநாட்டின் பிரகடனமாக செய்யப்பட்டது.
அதன் பின்னர் மதிமுகவின் காஞ்சி மாவட்ட செயலாளர் பாலவாக்கம் சோமு அந்த முடிவை ஏற்க இயலாது என்று சில காரணங்களை சொல்லி வெளியேறி தி.மு.க.வில் இணைந்தார்.
ம.தி.மு.கவை அழிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தி.மு.க. செயல்படுவதால் மக்கள் நல கூட்டியக்கத்தில் சேரலாம் என உயர்நிலைக்குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
மதிமுக மாவட்ட செயலாளர்களை தன்வசம் இழுக்கும் முயற்சியில் ஒரு மாதத்திற்கு முன்பிருந்தே மு.க.ஸ்டாலின் ஈடுபட்டார். முல்லைப்பெரியாறு, ஈழத்தமிழர் உள்ளிட்ட விவகாரங்களில் திமுக, தமிழர்களுக்கு துரோகம் செய்துவிட்டது.
ஊழலாலும், குடும்ப அரசியலாலும் திமுக, தமிழகத்தை பாழாக்கிவிட்டது. திமுக, அதிமுக ஆட்சியில் தமிழகம் ஊழல் மயமாகிவிட்டது. இவ்வாறு ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
-
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications