அனைத்து கட்சி கூட்டத்தில் திமுக சொன்ன கோரிக்கை.. அப்படியே ஏற்ற அரசு!
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விஷயத்தில் பிரதமர் தலையிட வேண்டும் என்று அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
Recommended Video

சென்னை : காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக முன்வைத்த கோரிக்கை அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
காவிரி நீர் விவகாரத்தில் தமிழகத்தின் உரிமைகளை மீட்டெடுப்பதற்காக சென்னை தலைமைச்செயலகத்தில் முதல்வர் பழனிசாமி தலைமையில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. காலை 10.30 மணியளவில் தொடங்கிய கூட்டம் மாலை 5 மணி வரை நடைபெற்றது.

கூட்டம் முடிந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கூறியதாவது : உடனடியாக விவசாய சங்கப் பிரதிநிதிகள் அனைவரையும் அழைத்துக் கொண்டு டெல்லி சென்று பிரதமரை சந்தித்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தோம்.
உச்சநீதிமன்றம் கொடுத்த 6 வார கால கெடுவில் 1 வாரம் முடிந்த நிலையில் பிரதமரை உடனடியாக சென்று சந்திக்க வேண்டும் என்று தீர்மானம் போட வேண்டும் என்று திமுக சார்பில் கோரிக்கை வைத்தோம். அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்ற பிறரும் இதனை வழிமொழிந்ததால் அந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
காவிரி நீர் விஷயத்தில் உள்ள சட்டச்சிக்கல்களை ஆய்வு செய்து சட்ட வல்லுநர்களின் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டோம், அந்த தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது. அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் முன் வைக்கப்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதற்கு வரவேற்பை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்.
-
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்!












Click it and Unblock the Notifications