ராம மோகன ராவ்தான் இன்னும் தலைமைச் செயலாளராமே.. உண்மையா முதல்வரே? கேட்கிறார் ஸ்டாலின்
ராமமோகனராவ் கூறியதை போல அவர்தான் இன்னும் தலைமைச் செயலாளரா என்பதை முதல்வர் பன்னீர்செல்வம் தெளிவுபடுத்த வேண்டும் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை: ராம மோகன ராவ் குற்றச்சாட்டுக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பதில் அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார்.
சென்னை, கோபாலபுரம் இல்லத்தில் நிருபர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின் மேலும் கூறியதாவது: முன்னாள் தலைமைச் செயலாளர் ராம மோகனராவ் இன்று அளித்த பேட்டியில், நான்தான் இப்போதும் தலைமைச் செயலர் என்கிறார். இதுகுறித்து முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்தான் பதில் அளிக்க வேண்டும்.

தலைமைச் செயலகத்தில் மத்திய வருமான வரித்துறை சோதனை நடத்தியபோதே, இதில் ஏதோ பெரிய மர்மம் உள்ளது என்று நான் கூறியிருந்தேன். எனவே இதுகுறித்து பன்னீர்செல்வம் விளக்கம் அளிக்க நான் கேட்டுக்கொண்டேன். இப்போதும் அதையேதான் வலியுறுத்துகிறேன்.
மேலும் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோதுதான், பத்திரிகையாளர்கள் அவரிடம் கேள்வி கேட்பதில்லை. இப்போது முதல்வர் பன்னீர் செல்வம் தலைமைச் செயலகத்திற்கு தினசரி வருகிறார். அவரிடமாவது நீங்கள் (பத்திரிகையாளர்கள்) கேள்வியை கேட்டு நாட்டு மக்களுக்கு இத்தகவல்களை தெரிவித்தால், நான் நன்றியுள்ளவனாக இருப்பேன்.
மேலும், வருமான வரித்துறை என்பது மத்திய அரசின்கீழ் செயல்படும் அமைப்பு என்றபோதிலும், அதற்கு தனி அதிகாரிகள் தனி உரிமைகள் உள்ளன. இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்தார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications