நியூட்ரினோ திட்ட அனுமதியை எதிர்த்து மேல்முறையீடு... ஸ்டாலின் வலியுறுத்தல்!
தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ திட்டத்திற்கு மத்திய அரசு அராஜகமாக அனுமதி அளித்துள்ளதாக திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை : தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ திட்டத்திற்கு மத்திய அரசு அராஜகமாக அனுமதி அளித்துள்ளதாக திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டியில் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த ஸ்டாலின், தேனி மாவட்டத்தில் மக்களின் வாழ்வாதாரத்தையும், நிலத்தையும் பாழ்படுத்தும் நியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்தக் கூடாது என்று தொடர்ந்து திமுக வலியுறுத்தி வருகிறது. நியூட்ரினோ திட்டத்திற்கு மத்திய அரசு அராஜகமாக அனுமதி அளித்துள்ளது. மத்திய சுற்றுச்சூழல் ஆணையத்தின் அனுமதியை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டும். தேசிய சுற்றுச்சூழல் ஆணையத்தில் உடனடியாக மேல்முறையீடு செய்ய வேண்டும்.

காவிரி விவகாரத்திற்காக அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று கூறினோம். அனைத்துக் கட்சி கூட்டத்தில் எம்பிகள், எம்எல்ஏக்கள் கூண்டோடு ராஜினாமா செய்யலாம் என்று கூறினோம். ஆனால் அதனையெல்லாம் பொருட்படுத்தவில்லை. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் மத்திய அரசு ஏமாற்றுகிறது, தமிழக அரசும் மக்களை ஏமாற்றுகிறது. மேலாண்மை வாரியம் அமைக்காத பட்சத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும் என்று கேட்டுக்கொண்டோம் நாளை ஒரு நாள் மட்டுமே இருக்கும் நிலையில் கண்துடைப்பு நடவடிக்கையாக இப்போது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என்கின்றனர் என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications