ஜல்லிக்கட்டு போராட்டம்.. சமூக விரோதிகள் புகுந்துவிட்டதாக கூறுவது உளவுத்துறையின் தோல்வி - ஸ்டாலின்
சென்னை, நடுக்குப்பம் பகுதியில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை ஆய்வு மேற்கொண்டார்.
சென்னை: ஜல்லிக்கட்டு போராட்டத்தில் சமூக விரோதிகள் புகுந்து விட்டதாக முதல்வர் கூறுவது உளவுத்துறையின் தோல்வியை காட்டுகிறது என்று திமுக செயல் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை நடுக்குப்பம் பகுதியில் மீனவர்கள் வசிக்கும் பகுதியில் எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் இன்று மாலை ஆய்வு செய்தார், மேலும் சமீபத்தில் போலீசாருக்கும், போராட்டக்கார்களுக்கும் இடையே நடந்த தாக்குதல் குறித்து கேட்டறிந்தார். அங்கு கலவரத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார்.

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின் கூறுகையில், சமூக விரோதிகள், தேசவிரோதிகள் போராட்டத்தில் புகுந்துவிட்டதாக முதல்வர் கூறுகிறார். ஆனால் சமூக விரோதிகளை கைது செய்யாதது அரசின் கையாலாகத்தனத்தை காட்டுகிறது. பெண் போலீஸ் ஒருவர் குடிசைக்கு தீ வைத்ததை அனைவரும் பார்த்தனர். காவல்துறையே வீடு, ஆட்டோக்களுக்கு தீ வைத்துள்ள வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. இது உளவுத்துறையின் தோல்வியை காட்டுகிறது.
அரசின் கவனத்தை ஈர்க்க மீனவர்களை திரட்டி 30 ஆம் தேதி திமுக சார்பில் போராட்டம் நடத்தப்படும். பொது மக்கள் மீது காவல்துறை நடத்திய தாக்குதலுக்கு நடவடிக்கை எடுக்க கோரி அரசை வலியுறுத்துவோம். தடியடிக்கு பயந்து வந்த மாணவர்களுக்கு உதவிய மீனவர்கள் மீது காவல்துறை தாக்குதல் நடத்தியுள்ளனர். நடுக்குப்பம் மீனவர்கள் மிகந்த சோகத்திலும் அதிரச்சியில் உள்ளனர். அப்பாவி மீனவர்களை காவல்துறை கைது செய்வது தொடர்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications