இந்து தீவிரவாதம்: கமல்ஹாசன் மீதான புகாரில் முகாந்திரம் இருந்தால் வழக்கு பதிவு செய்ய ஹைகோர்ட் உத்தரவு
இந்து தீவிரவாதம் பிரச்சனையில் கமல்ஹாசன் மீதான புகாரில் முகாந்திரம் இருந்தால் வழக்கு பதிவு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை: இந்து தீவிரவாதம் விமர்சனம் தொடர்பாக கமல்ஹாசன் மீதான புகாரில் முகாந்திரம் இருந்தால் போலீசார் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
இந்து தீவிரவாதம் குறித்து விமர்சன கட்டுரையை வார இதழ் ஒன்றில் கமல்ஹாசன் எழுதியிருந்தார். இது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

உத்தரப்பிரதேசத்தின் வாரணாசியில் கமல்ஹாசன் மீது வழக்கு தொடரப்பட்டது. கமல்ஹாசன் மீது போலீசார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவும் வாரணாசி நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதேபோல் தேவராஜன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் கமல்ஹாசன் மீது வழக்கு தொடர்ந்தார். அவர் தமது மனுவில், கமல்ஹாசனுக்கு எதிராக போலீசில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஆகையால் கமல்ஹாசன் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் தேவராஜன் வலியுறுத்தியிருந்தார்.
இதை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், கமல்ஹான் மீதான தேவராஜனின் புகாரில் முகாந்திரம் இருந்தால் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளது.
ஏற்கனவே நிலவேம்பு கசாயம் தொடர்பான வழக்கிலும் கமல்ஹாசன் மீதான புகாரில் முகாந்திரம் இருந்தால் வழக்குப் பதிவு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது,.
-
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications