மவுலிவாக்க கட்டட விபத்து: மு.க.ஸ்டாலின் வழக்கில் தமிழக அரசுக்கு நீதிமன்றம் கேள்வி
சென்னை: மவுலிவாக்க கட்டட விபத்து குறித்த விசாரணை அறிக்கையை சட்டசபையில் தாக்கல் செய்யாதது ஏன்? என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
சென்னை மவுலிவாக்கத்தில் கட்டப்பட்டு வந்த இரண்டு 11 மாடி அடுக்கு குடியிருப்பு கட்டடத்தில் ஒன்று இடிந்து விழுந்தது. கடந்த ஆண்டு ஜூன் 28-ந் தேதி நிகழ்ந்த இந்த சம்பவத்தில் 61 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டோர் காயத்துடன் மீட்கப்பட்டனர்.

இதுகுறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ரகுபதி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தியது. அந்த விசாரணை அறிக்கை கடந்த ஆண்டு முதல்வர் ஜெயலலிதாவிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்நிலையில் தி.மு.க. பொருளாளர் ஸ்டாலின், சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி ஆகியோர் மவுலிவாக்கம் கட்டட விபத்து குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடக் கோரி வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு கடந்த மார்ச் மாதம் விசாரணைக்கு வந்தபோது, ரகுபதி ஆணையத்தின் விசாரணை குறித்து ஸ்டாலின் தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த அரசு வழக்கறிஞர் மூர்த்தி, அந்த அறிக்கையை சட்டசபையில் தாக்கல் செய்துவிட்டு, பின்னர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதாக கூறினார்.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி ஜூன் மாதம் அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணை இன்று நடந்தது. அப்போது மவுலிவாக்கம் கட்டட விபத்து பற்றிய அறிக்கையை இதுவரை சட்டசபையில் தாக்கல் செய்யாதது ஏன்? என நீதிபதி கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த தலைமை வழக்கறிஞர் சோமையாஜி, அரசிடம் விளக்கம் கேட்டு தெரிவிப்பதாகக் கூறினார். இதையடுத்து இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை ஜூலை 14ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications