தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் முழுவதையும் பாடக்கோரிய வழக்கு... தள்ளுபடி செய்தது ஹைகோர்ட்!
தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் முழுவதையும் பாட உத்தரவிடக்கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரிக்க ஹைகோர்ட் மறுத்துவிட்டது.
Recommended Video

சென்னை : தமிழ்த்தாய் வாழ்த்தை மாற்றக்கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.
மனோன்மணியம் சுந்தரனார் இயற்றிய தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் முழுவதையும் பாட உத்தரவிடக்கோரி சென்னையை சேர்ந்த தமிழாசிரியரின் மகன் ராமபூபதி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். ராமபூபதி தனது மனுவில் ஒரு பாடல் முழுவதுமாக எழுதப்பட்ட நிலையில் அதனை மாற்றியமைத்தோ அல்லது சிதைத்தோ பாடுவது இயற்றியவரை அவமதிக்கும் செயல் என்று குறிப்பிட்டிருந்தார்.

எனவே ஏற்கனவே இருந்த பாடலையே இனி பாட வேண்டும் என உத்தரவிட அவர் கோரியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார், பவானி சுப்பராயன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. 50 ஆண்டுகளாக பாடப்பட்டு வரும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு அனைவரும் மரியாதை செலுத்துகின்றனர். முன்பு இருந்த பாடலை பாட உத்தரவிட்டால் சிலர் எதிர்த்து போராடக்கூடும், மீண்டும் பழைய பாடலை கொண்டு வருவதன் மூலம் அமைதியை குலைக்க விரும்புகிறீர்களா? எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் இந்த வழக்கு இனி விசாரணைக்கு உகந்ததல்ல என்று கூறி மனுவை விசாரணைக்கு ஏற்க நீதிபதிகள் மறத்துவிட்டனர்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!











Click it and Unblock the Notifications