கார்த்தி சிதம்பரத்துக்கு எதிரான லுக் அவுட் சுற்றறிக்கைக்கு ஹைகோர்ட் இடைக்கால தடை
சென்னை: முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்துக்கு எதிரான சிபிஐ-ன் லுக் அவுட் சுற்றறிக்கைக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனத்திற்கு கார்த்தி சிதம்பரம் அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் தடையில்லாத சான்றிதழ் பெற்றுத்தருவதாக கூறி, மொரிஷியசில் இருந்து சட்டவிரோதமாக பணம் பெற்றதாக சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.

சட்ட விரோத பண பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் மத்திய அமலாக்கப்பிரிவு அதிகாரிகளும், கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளனர். அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்கின் காரணமாக கார்த்தி சிதம்பரத்தை, பாஸ்போர்ட் சட்டத்தின்படி மத்திய உள்துறை அமைச்சகம் 'தேடப்படும் நபராக' அறிவித்து சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.
இதுபற்றி, நாடு முழுவதும் உள்ள அனைத்து விமான நிலையங்களுக்கும், துறைமுகங்களுக்கும் சுற்றறிக்கையும் அனுப்பப்பட்டது.
எனினும், தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டது சட்டத்திற்கு புறம்பானது எனக் கூறி, கார்த்தி சிதம்பரம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் தேடப்படும் நபர் என்ற உத்தரவுக்கு, தடை விதித்துள்ளது.
தொழில் நிமித்தமாக அவ்வப்போது வெளிநாட்டுக்குச் சென்று வருவது பற்றி, சிபிஐக்கு முறைப்படி தகவல் சொல்லியிருந்தாலும், வேண்டுமென்றே இந்த தேடுதல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக, கார்த்தி சிதம்பரம் தனது மனுவில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications