For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் விவசாய நிலங்களை வீட்டு மனைகளாகப் பத்திரப்பதிவு செய்ய தடை நீட்டிப்பு

தமிழகத்தல் அங்கீகரிக்கப்படாத வீட்டு மனைகளை பத்திரப்பதிவு செய்ய விதித்துள்ள தடையை சென்னை உயர்நீதிமன்றம் நீட்டித்துள்ளது. வழக்கு விசாரணை வரும் 27ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: விவசாய நிலங்களை வீட்டு மனைகளாகப் பத்திரப் பதிவு செய்ய விதித்துள்ள தடையை சென்னை உயர்நீதிமன்றம் நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. மேலும அங்கீகரிகக்கப்படாத வீட்டு மனைகளை வகைப்படுத்த தமிழக அரசுக்கு நீதிமன்றம் அவகாசம் வழங்கியுள்ளது.

தமிழகத்தில் விவசாய நிலங்களை வீட்டு மனைகளாக மாற்ற தடை விதிக்க கோரி, வழக்கறிஞர் ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதையடுத்து அங்கீகரிக்கப்படாத வீட்டு மனைகளை பத்திர பதிவு செய்ய, சென்னை உயர்நீதிமன்றம் பத்திர பதிவு துறைக்கு தடை விதித்ததது.

Madras High court extended the ban on unauthorized residential flats in Tamilnadu

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு சார்பில் மேலும் கால அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து அங்கீகரிக்கப்படாத வீட்டு மனைகளை வகைப்படுத்த தமிழக அரசுக்கு கால அவகாசம் வழங்கிய சென்னை உயர் நீதிமன்றம், வழக்கை பிப்ரவரி 27ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

அதுவரை விவசாய நிலங்களை வீட்டு மனைகளாகப் பத்திரப் பதிவு செய்ய தடை நீடிக்கிறது என்றும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த தடை உத்தரவால் மக்கள் பாதிக்கப்படுவதை அறிந்து அரசுதான் விரைவாக முடிவெடுக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

English summary
Madras High court extended the ban on unauthorized residential flats in Tamilnadu.The trial has been postponed to the 27th. The court gave more time to the state government to regularise the unauthorized residential flats.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X