டி.என்.பி.எஸ்.சி. உறுப்பினர் நியமனம்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்
சென்னை: டிஎன்பிஎஸ்சி உறுப்பினர்களாக புதிதாக 11 பேர் நியமிக்கப்பட்டதை எதிர்த்து பாமக மற்றும் திமுக சார்பில் தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் (டி.என்.பி.எஸ்.சி.) தலைவர் மற்றும் 14 உறுப்பினர்கள் இருக்க வேண்டும். ஆனால் தேர்வாணையத்தில் 10 உறுப்பினர்களின் இடம் காலியாக இருந்தது. இந்நிலையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய முன்னாள் தலைவரும், உறுப்பினருமான பாலசுப்பிரமணியன் ஓய்வு பெற்றதை அடுத்து தேர்வாணையத்திற்கு 11 புதிய உறுப்பினர்களை தமிழக அரசு நியமித்தது.
இதையடுத்து டிஎன்பிஎஸ்சி உறுப்பினர்களாக அதிமுக பிண்ணனி கொண்டவர்கள் நியமிக்கப்பட்டிருப்பதாக கூறி இதை எதிர்த்து பாமக மற்றும் திமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.
இது தொடர்பான மனு, உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.சுப்பையா முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் ஆஜராகி வாதிட்டார்.
இதுகுறித்து தமிழக அரசின் முதன்மை செயலர், டிஎன்பிஎஸ்சி உறுப்பினர் செயலர், கவர்னரின் தனிச்செயலர் மற்றும் புதிதாக நியமிக்கப்பட்ட 11 டிஎன்பிஎஸ்சி உறுப்பினர்களும் பதிலளிக்க வேண்டும் என்று கூறி விசாரணையை வரும் மார்ச் 4-ம் தேதிக்கு நீதிபதி சுப்பையா ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
2016 சட்டமன்ற தேர்தலில்.. அதிமுகவின் இன்பதுரை வெற்றி செல்லாது.. உயர்நீதிமன்றம் அதிரடி! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
பக்ரீத் பண்டிகை: பசு, கன்றுகள் வதைக்கு தடை.. நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தியதாக தமிழக அரசு விளக்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications