சட்டம்தான் எழுத்தைக் கட்டுப்படுத்தும்: "மாதொருபாகன்" வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் கருத்து
சென்னை: சட்டத்தை தவிர வேறு யாரும் எழுத்துக்கு கட்டுப்பாட்டை நிர்ணயிக்க முடியாது என்று மாதொருபாகன் நாவல் தொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
தமிழ் எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய 'மாதொரு பாகன்' என்ற நாவல் 2010-ம் ஆண்டு வெளியிடப்பட்டது. இதில், திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயில் தேரோட்டத்தின் மாயை பற்றியும், குழந்தையில்லா தம்பதிகளின் வீணான முயற்சிகள் குறித்தும் எழுதியுள்ளார்.
நாவல் வெளியிடப்பட்டபோது எவரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. தற்போது திடீரென இந்த நாவலின் எதிர்ப்பாளர்களும் சாதிய அமைப்புகளும் சேர்ந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.

இதையடுத்து நாமக்கல் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடந்த அமைதிக் குழுக் கூட்டத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாகவும் நாவலில் உள்ள ஆட்சேபகரமான பகுதிகளை நீக்கிவிடுவதாகவும் சந்தையில் விற்காத மீதமுள்ள நாவலை திரும்பப் பெற்றுக் கொள்வதாகவும் இனிமேல் மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் எழுதப்போவதில்லை என்றும் பெருமாள் முருகன் உறுதியளித்தார். இதனடிப்படையில் ஏற்பட்ட ஒப்பந்தத்தில் அவர் கையெழுத்திட்டார்.
இந்த அமைதிக் கூட்ட முடிவை எதிர்த்து பெருமாள் முருகனுக்கு ஆதரவாக தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத் தலைவர் ச.தமிழ் செல்வன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
இவ்வழக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி சுந்தரேஷ் பெஞ்ச் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சட்டம் - ஒழுங்கைப் பாதுகாக்கவே அமைதிக் குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது என்று அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இதில் அதிருப்தி அடைந்த நீதிபதிகள், எதை எழுதுவது, எழுதக் கூடாது என்பதை சட்டத்தால் மட்டுமே முடிவு செய்ய முடியும். சட்டத்தை தவிர வேறு யாரும் நிர்ணயிக்க முடியாது என்று கூறினர். மேலும் இந்த வழக்கில் எழுத்தாளர் பெருமாள் முருகனையும் சேர்க்க உத்தரவிட்டனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications