மதுரையில் 3 பள்ளிக்கூடங்களுக்கு வெடிகுண்டு புரளி

மதுரையில் கடந்த சில மாதங்களாக பள்ளிக் கூடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் இன்று அதிகாலை 6 மணி அளவில் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு ‘மர்ம' போன் வந்தது. போனை போலீசார் எடுத்து பேசியபோது, எதிர் முனையில் ‘‘பொன்மேனியில் உள்ள டால்பின் மெட்ரிக் குலேசன் பள்ளியிலும், டி.வி.எஸ். நகரில் உள்ள டி.வி.எஸ். பள்ளியிலும், ஜெய்ஹிந்த் புரத்தில் உள்ள ஒரு பள்ளியிலும் வெடிகுண்டு வைத்து இருப்பதாகவும், அது 9 மணிக்குள் வெடிக்கும் என்றும் 2 ‘மர்ம' நபர்கள் பேசி கொண்டு இருந்ததாக அந்த பெண் கூறி விட்டு உடனே போனை துண்டித்து விட்டார்.
இந்த மிரட்டல் சம்பவம் குறித்து உடனடியாக எஸ்.எஸ். காலனி போலீசுக்கும், ஜெய்ஹிந்த் புரம், சுப்பிரமணியபுரம் ஆகிய போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. வெடிகுண்டு இருப்பதாக கூறப்பட்ட பள்ளிகளுக்கு போலீசார் விரைந்து சென்று சோதனையில் ஈடுபட்டனர். மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. மெட்டல் டிடெக்டர் மூலமும் அங்குலம், அங்குலமாக சோதனையிடப்பட்டது. ஆனால் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை.
இதேபோல் பொன் மேனியில் உள்ள பள்ளிக்கு எஸ்.எஸ். காலனி இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு தலைமையில் போலீசார் விரைந்து சென்று பள்ளி முழுவதும் சோதனையிட்டனர். அங்கும் வெடிகுண்டு ஏதும் சிக்கவில்லை. இது வெறும் புரளி என தெரிய வந்தது.
பள்ளிக்கூடங்களில் வெடிகுண்டு வெடிக்கும் என பேசிய ‘மர்ம' ஆசாமிகள் யார் என்றும், போனில் பேசிய பெண் யார்? என்பது குறித்தும் சுப்பிரமணியபுரம் மற்றும் எஸ்.எஸ். காலனி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவத்தால் மதுரையில் பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications