மதுரை சித்திரை திருவிழா - மாட வீதிகளில் ஆடி அசைந்து வரும் தேர் - பக்தர்கள் தரிசனம்
மதுரையில் பிரசித்தி பெற்ற மீனாட்சியம்மன் அம்மன் ஆலய சித்திரை திருவிழா தேரோட்டம் தொடங்கியது.
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான, மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நேற்று நடைபெற்றது. திருக்கல்யாணம் முடிந்த புதுமண தம்பதிகள் இன்று திருத்தேரில் எழுந்தருளி நான்கு மாட வீதிகளிலும் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.
மதுரையில் சித்திரை திருவிழா மீனாட்சி அம்மன் கோயிலில் கடந்த 28ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினசரியும் அம்மையும், அப்பனும் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்தருகின்றனர்.

திருக்கல்யாணம்
சித்திரை திருவிழாவை முன்னிட்டு மதுரை மாநகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. பத்தாம் திருநாளான நேற்று மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நடைபெற்றது. இதனைத் காண வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் வந்திருந்தனர். அவர்கள் திருக்கல்யாணத்தை காண சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.
கல்யாண விருந்து
திருமணம் முடிந்த பிறகு விருந்து நடைபெற்றது. சுமார் ஒரு லட்சம் பேர் வரை விருந்து சாப்பிட்டு விட்டு மொய் எழுதிச் சென்றனர். இதனைத்தொடர்ந்து இரவு 7.30 மணிக்கு சுந்தரேசுவரர் யானை வாகனத்திலும், மீனாட்சி அம்மன் ஆனந்தராயர் பூப்பல்லக்கிலும் எழுந்தருளி 4 மாசி வீதிகளிலும் வலம் வந்தனர்.

தேரோட்டம்
சித்திரை தேரோட்டம் மதுரையில் பிரசித்தி பெற்றது. திருக்கல்யாணம் முடிந்த தம்பதிகள் மதுரை மக்களை காண தேரில் எழுந்தருளி வலம் வருவார்கள். 11வது நாளான இன்று சுந்தரேஸ்வரர் - பிரியாவிடை அம்மன் பெரிய தேரிலும், மீனாட்சி அம்மன் சிறிய தேரிலும் வீதியுலா வருகின்றனர். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து வருகின்றனர்.

ஆடி அசைந்து வரும் தேர்
தேர் நிலையில் இருந்து புறப்பட்டு 4 மாசி வீதிகள் வழியாக ஆடி அசைந்துவரும் அழகை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு தரிசித்து வருகின்றனர். தேருக்கு முன்பாக கோவில் மாடுகள் , ஒட்டகங்கள் செண்டை மேளம் அணிவகுப்பு ஆகியவை நடைபெற்று வருகிறது. ஏராளமானோர் நடனமாடிக்கொண்டும் செல்கின்றனர்.

போலீஸ் பாதுகாப்பு
சித்திரை திருவிழா தேரோட்டை முன்னிட்டு மதுரை முழுவதும் சுமார் 2500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த பட்டுள்ளனர். சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி மே 10 ம் தேதி நடைபெற இருக்கிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications