மோடியின் வாரணாசிக்கு அடுத்து மதுரையில் சாதித்த சு.வெங்கடேசன்! ஒரே இடத்தில் 17000 மாற்றுத்திறனாளிகள்
மதுரை: பிரதமர் மோடியின் வாரணாசி தொகுதிக்கு அடுத்தபடியாக 17,000 மாற்றுத்திறனாளிகளை கொண்ட நலத்திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்ச்சியை மதுரையில் நடத்தி சாதித்து உள்ளார் மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்பி சு வெங்கடேசன்.
இதுகுறித்து பதிவிட்டு உள்ள சு வெங்கடேசன், "மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்கள் வழங்கும் முகாம் முதல் கட்டமாக மதுரை தமுக்கம் மைதானத்தில் நடந்து முடிந்துள்ளது. மதுரை மாவட்டத்தில் 15 மையங்களில் நடந்த அளவீட்டு முகாம்களில் 17,000 க்கும் மேற்பட்டோர் பங்கெடுத்தனர். பல்வேறு நலத்திட்டங்கள் அவர்களை சென்றடைந்தது.
அதில் அலிம்கோ சார்பில் 2,477 பேருக்கு செயற்கை உபகரணங்களும் கருவிகளும் வழங்கட்டுள்ளன. இப்பெரும் பணி எளிதில் நடந்துவிடவில்லை. 2019 நவம்பர் 4 ஆம் தேதி அன்றைய ஒன்றிய அமைச்சருக்கு கடிதம் எழுதினேன். அன்றைக்குத் தொடங்கி இந்த மே 18 ஆம் தேதி முகாம் நடைபெற்றது வரை ஒன்றிய அமைச்சர், துறை செயலாளர். அலிம்கோ நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர், மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு எங்களது அலுவலகத்தில் இருந்து எழுதப்பட்ட கடிதங்களின் எண்ணிக்கை சுமார் நூறு இருக்கும்.

இதன் தொடர்ச்சியாக இந்த அலுவலகங்களுக்கெல்லாம் எத்தனையோ முறை தொடர்புகொண்டிருப்பேன். கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் மூன்று முறை மதிப்பீட்டு முகாம்களுக்குத் தேதி அறிவிக்கப்பட்டது. மாவட்டத்திலிருந்த அன்றைய அமைச்சர்கள் இருவரும் தலா ஒரு முறை முகாமை ஒத்திவைத்து மாற்றுத்திறனாளிகள் மீதான தங்களின் அன்பை வெளிப்படுத்தினர். மூன்றாம் முறை கொரோனா தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.
அந்த காலத்தில் ஆட்சியர் ஒருவர் இருந்தார். இந்த முகாம் நடந்தால் எதிர்க்கட்சி எம்.பி.க்கு பெயர் கிடைக்கும். அதனால் தனது எஜமானர்களுக்கு தன் மீது வருத்தம் வந்துவிடும் என்பதால் எவ்வளவு உதாசீனப்படுத்த முடியுமோ அவ்வளவு உதாசீனப்படுத்தினார். அவரைப் பொதுவெளியில் அம்பலப்படுத்தியிருக்க முடியும். ஆனால் மாற்றுத்திறனாளிகளுக்காகச் செய்யப்படும் இப்பெரிய பணி தடைபட்டுவிடக்கூடாது என்ற நோக்கத்தோடு அவமானங்களை சகித்துக்கொண்டோம்.
ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் ஆட்சியர் அறைக்குள் நுழைந்தால், எழுந்து நின்று வரவேற்க வேண்டும் என்பதில் தொடங்கி நாடாளுமன்ற உறுப்பினர் எப்படி நடத்தப்பட வேண்டும் என 20க்கும் மேற்பட்ட விதிகள் உண்டு. அதனை மீறுகிறவர்களை நாடாளுமன்றத்தின் உரிமைக்குழுவின் முன்னால் நிறுத்த முடியும். அவரை அப்படி நிறுத்தியிருக்க முடியும். அதிகாரத்துக்கு எதிராக போராடுவதை விட்டுவிட்டு அதிகாரத்தின் தொங்கு சதையோடு போராடி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை.
இப்படியாக இந்த முகாமை நடத்தி முடிக்க எத்தனையோ தடைகளைத் தாண்டியுள்ளோம். அவற்றை எல்லாம் எழுதினால் பல பக்கங்கள் நீளும். சுருக்கமாகச் சொல்வது ஒன்று தான். அரசாங்கத்தில் திட்டம் இருந்தாலும் அதனைப் பயன்படுத்தும் சட்ட வாய்ப்பு இருந்தாலும் எந்த ஒரு நல்ல செயலையும் அவ்வளவு எளிதில் யாராலும் செய்துவிட முடியாது. நன்மையைச் செய்வதற்கு இணையான சவால் இந்த உலகில் வேறில்லை.
ஆனால் அதே நேரம், நன்மையைச் செய்ய முனையும் யாரும் தனித்துவிடப்படுவதில்லை. அவர்களின் அவமானங்களைத் துடைக்க ஆயிரம் கைகள் நீண்டு வரும். அவர்களின் முயற்சியை தனக்கான முயற்சியாக ஏந்திக்கொள்ள எத்தனையோ பேர் முன்வருவர். இந்த முகாமின் துவக்கவிழாவில் பேசிய ஒன்றிய இணை அமைச்சர் மாண்புமிகு அ.நாராயணசாமி அவர்கள் "2477 பேருக்கு உபகரணங்கள் வழங்கப்படுவதென்பது அசாதாரணமான ஒன்று.
இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் இவ்வளவு சிறப்பாக இம்முகாம் நடைபெறுகிறது என்றால் அதற்கு முக்கியக் காரணம் உங்களது தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர். அவர் தொடர்ந்து எடுத்த முயற்சியே இவ்வளவு பெரிய வெற்றியைத் தேடித்தந்துள்ளது" என்று குறிப்பிட்டார். உண்மையைச் சொல்வதென்றால் இப்பெரும் பணியில் கடைநிலைப் பங்களிப்புதான் என்னுடையது.
எமது இயக்க தோழர்களே இந்த மொத்தக் கனவுக்கும் உயிர் கொடுத்தவர்கள். மாவட்டம் முழுவதும் 17760 மாற்றுத்திறனாளிகளைப் பங்கெடுக்க வைத்து சரித்திரச் சாதனை படைத்தவர்கள் எம் தோழர்கள். பிரதமரின் வாரணாசி தொகுதியில் 21000 மாற்றுத்திறனாளிகள் பங்கெடுத்துள்ளார்கள். அதுவே இதுவரை இந்தியாவில் நடைபெற்ற முகாம்களில் சாதனை எண்ணிக்கை.

அதனைத் தாண்ட வேண்டும் என்ற லட்சியத்தோடு பணியாற்றினோம். தாண்ட முடியாத வருத்தமில்லை. தொட்டுவிட்ட மகிழ்வே இருக்கிறது. இந்தப் பெரும் பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் இந்த நேரத்தில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். அலிம்கோ நிறுவனம், தமிழ்நாடு அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம், DYFI, SFI தோழர்கள், ரோட்டரி அமைப்புகள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள். அனைவருக்கும் எமது நன்றி.
மக்களுக்கான எங்களின் பணிக்கு மேலும் உத்வேகம் கொடுக்கும் செயலொன்றினை நிறைவேற்றியுள்ளோம். நிகழ்ச்சியன்று நண்பர் ஒருவர் கேட்டார் "இரண்டு கோடி ரூபாய்க்கான உதவிகளை ஒரு தொகுதியில் மட்டும் எப்படி பெற்றுத்தர முடிந்தது?" நாங்கள் உதவி பெற்றுத்தந்தவர்கள் அல்ல, மாற்றுத்திறனாளிகள் தங்களின் உரிமையைப் பெற உடன் நின்றவர்கள். எளிய பொருளாதார அளவீடுகளுக்குள் அடங்காதது மனிதநேயமும், தோழமையும்." என்று குறிப்பிட்டு உள்ளார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications