மதுரை மீனாட்சியம்மன் கோயில் அருகே பெட்ரோல் குண்டுகள் வீச்சு !
மதுரை: மதுரையில் உள்ள உலகப் புகழ் பெற்ற மீனாட்சி அம்மன் கோயில் கிழக்கு கோபுரம் அருகே மர்மமாக பெட்ரோல் குண்டுகள் வெடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் ராஜகோபுரம் எழில்வாய்ந்த ஒன்று. மதுரையின் எந்த திசையில் இருந்து பார்த்தாலும், ஓங்கி உயர்ந்து காணப்படும் அதன் அழகு, கம்பீரம் மிக்கது.

இந்நிலையில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே கீழசித்திரை வீதி, வடக்கு சித்திரை வீதி சந்திப்பு பகுதியில் பழைய சென்ட்ரல் மார்க்கெட் அருகே காலி இடம் உள்ளது. இதன் சுற்றச்சுவர் அருகே பலத்த சத்தத்துடன் வெடி வெடித்தது. இதையடுத்து அருகில் இருந்தவர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது மர்மநபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசியிருந்தது தெரியவந்தது. பின்னர் அந்த பகுதியில் உள்ள பொது கட்டண கழிப்பறை அருகே பாட்டில்கள் மற்றும் காலி மண்ணெண்ணெய் கேன்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு சோதனை நடத்திய போலீசார் வெடிக்காத இரண்டு பெட்ரோல் குண்டுகளை கைப்பற்றியுள்ளனர்.
இந்த சம்பவத்தால் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது. பெட்ரோல் குண்டுகள் வீசிய மர்ம நபர்கள் குறித்து விளக்குத்தூண் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலை சுற்றி நான்கு கோபுர வீதிகளிலும் எப்போதும் பரபரப்பாக இருக்கும் சூழ்நிலையில் அந்த பகுதியில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications