மதுரையில் மேலும் 14 வெடிகுண்டுகள் பறிமுதல்-வரிச்சியூர் செல்வம் தம்பி செந்தில் வீட்டில்!
மதுரை: மதுரையில் வரிச்சியூர் செல்வத்தின் தம்பி செந்தில் வீட்டிலிருந்து மேலும் 14 வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மதுரை அண்ணாநகர் கிழக்கு தெருவில் ஒரு குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட 11 வெடிகுண்டுகள் கடந்த 10 ஆம் தேதி பறிமுதல் செய்யப்பட்டன. இதுகுறித்து அண்ணாநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.

இந்த நிலையில் பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வம், டிரைவர் பார்த்திபன் மதுரை கோர்ட்டிலும், கூட்டாளி கீரிமணி விழுப்புரம் கோர்ட்டிலும், வரிச்சியூர் செல்வத்தின் தம்பி செந்தில், அவரது நண்பர் சுப்பிரமணி ஆகியோர் மேலூர் கோர்ட்டிலும் சரண் அடைந்தனர்.
இந்த வழக்கில் வெடிகுண்டுகளுக்கு தேவையான மூலப்பொருட்களை வாங்கி கொடுத்ததாக திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டியை சேர்ந்த பிஸ்டல் பாண்டியை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர் தெரிவித்த தகவலின் பேரில் வரிச்சியூரை சேர்ந்த சமருதீன்பாவை போலீசார் கைது செய்தனர்.
வழக்கு குறித்து விசாரிக்க வரிச்சியூர் செல்வத்தையும், அவரது டிரைவர் பார்த்திபனையும் அண்ணாநகர் போலீசார் காவலில் எடுத்தனர். விசாரணையில், பெருசு அழகர் என்பவருக்கும் தங்களுக்கும் மோதல் ஏற்பட்டது. இதையொட்டி பாதுகாப்பிற்காக வெடிகுண்டுகளை மதுரைக்கு வாங்கி வந்தோம்.
வேறுசில ரவுடிகள் மூலம் இருதரப்பும் பேசி சமரசமாகி விட்டோம். இதனால் குண்டுகள் தேவையில்லாமல் போனது. இந்த விவகாரம் பற்றி தெரியவந்து போலீசார் விசாரித்ததால் குப்பைத் தொட்டியில் குண்டுகளை வீசினோம் என்று அவர்கள் போலீசில் வாக்குமூலம் அளித்ததாக கூறப்படுகிறது.
சென்னையிலிருந்து இந்த குண்டுகள் வாங்கப்பட்டன. மொத்தம் 25 குண்டுகள் வாங்கப்பட்டன. அதில் 11 சிக்கி விட்டது. மீதமுள்ள 14 குண்டுகள் எங்கே என்று போலீஸார் தீவிரமாக விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக வரிச்சியூர் செல்வம் போலீசில் தெரிவித்த வாக்குமூலத்தின்படி செந்திலின் வீட்டில் மீதம் உள்ள குண்டுகள் பதுக்கி வைத்து இருப்பது தெரியவந்தது. அதன் அடிப்படையில் வரிச்சியூரில் உள்ள செந்திலின் வீட்டிற்கு போலீசார் சென்று சோதனை செய்தனர்.
அங்கு மாட்டுதொழுவத்தில் ஒரு அட்டை பெட்டியில் உமி போட்டு மறைத்து வைத்திருந்த 14 வெடிகுண்டுகளை பறிமுதல் செய்தனர். அந்த குண்டுகளை பாதுகாப்பாக மலை பகுதிக்கு கொண்டு சென்று போலீசார் அழித்தனர்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications