பஸ் கட்டண உயர்வைக் கண்டித்து தொடரும் கிளர்ச்சி... மதுரையில் மாணவர்கள் மீது போலீஸ் தடியடி
பேருந்து கட்டண உயர்வை எதிர்த்து மதுரையில் போராடிய மாணவர்கள் மீது காவல்துறை தடியடி நடத்தி உள்ளது.
மதுரை: தமிழக அரசு பேருந்து கட்டண உயர்வை எதிர்த்து மதுரையில் போராட்டம் நடத்திய கல்லூரி மாணவர்கள் மீது காவல்துறை தடியடி நடத்தி உள்ளதால் பதற்றம் ஏற்பட்டு உள்ளது.
தமிழக அரசு பேருந்து கட்டணங்களை திடீரென்று உயர்த்தியது. இந்த அதிக கட்டண உயர்வால் பொதுமக்கள், மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதனைக் கண்டித்து கடந்த ஒரு வார காலமாக தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன.

இந்நிலையில், இன்று தமிழகம் முழுவதும் எதிர்க்கட்சிகள் சாலை மறியல் போராட்டம் நடத்தின. இதற்கு ஆதரவாக, பல்வேறு இடங்களில் பொதுமக்களும், கல்லூரி மாணவர்களும் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
திருவாரூர், கோவை, அரியலூர், மதுரை, சென்னை என பல இடங்களிலும் மாணவர்கள் போராட்டத்தில் திரளாக கலந்து கொண்டனர். அரியலூரில் 2000 கல்லூரி மாணவர்களும், மதுரை அருகே மேலூரில் பல்வேறு தனியார் கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுரையில் மேலூர் மற்றும் அழகர்கோவிலில் பேருந்து கட்டண உயர்வை எதிர்த்துப் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது காவல்துறை தடியடி நடத்தியது. இதனால் அந்தப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.
-
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்?












Click it and Unblock the Notifications