பஸ் கட்டணம் வாபஸ் பெறப்படும்வரை உள்ளிருப்பு போராட்டம்.. மதுரை கல்லூரி மாணவர்கள் ஆவேசம்
பேருந்து கட்டண உயர்வு திரும்பபெறும் வரை போராட்டம் தொடரும் என மதுரை மாணவர்கள் தெரிவித்துள்ளனர்
Recommended Video

மதுரை: மதுரையில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்கள் பேருந்து கட்டண உயர்வு திரும்ப பெறும் வரை தங்களின் போராட்டம் தொடரும் என தெரிவித்துள்ளனர்
கடுமையாக உயர்த்தப்பட்ட பேருந்து கட்டணத்தை திரும்ப பெற வலியுறுத்தி தமிழகமெங்கும் மாணவர்கள், பொதுமக்கள், அரசியல் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். மாணவர்கள் போராட்டம் நான்காவது நாளாக தொடர்ந்து வருகிறது. பல இடங்களில் பேருந்துகளை மாணவர்கள் சிறைபிடித்தும், கருப்பு துணி கட்டியும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேபோன்று மதுரை திருப்பரங்குன்றம் மன்னர் கல்லூரி மாணவ, மாணவிகள் 500க்கும் மேற்பட்டவர்கள் கல்லூரி எதிரே திருப்பரங்குன்றம் சாலையில் நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் காவல்துறையினர் கூட்டத்தை கலைக்க மாணவ- மாணவிகள் மீது தடியடி நடத்தினர். இதற்கு கண்டனம் தெரிவித்து மாணவர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
காவல்துறையினர் மன்னிப்பு கோர வேண்டும் எனவும் மாணவர்கள் தொடர் கண்டன கோஷங்களை எழுப்பும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மன்னர் கல்லூரியில் சட்டப் பணிகள் குறைதீர்க்கும் முகாமில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிக்கு வந்த நீதிபதி, மாவட்ட ஆட்சி தலைவர் வீரராகவராவ்வை மாணவர்கள் முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தொடர்ந்து நான்காவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்கள், பேருந்து கட்டண உயர்வை திரும்ப பெறும் வரை தங்களின் உள்ளிருப்பு போராட்டம் தொடரும் என தெரிவித்துள்ளனர். இந்த போராட்டத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் ஈடுபட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications