For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெ. மரணம் குறித்து நீதி விசாரணைக்கு வலியுறுத்தி நடத்தப்பட்ட உண்ணாவிரதத்திற்கு நல்ல ஆதரவு - மாஃபா

ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணைக்கு வலியுறுத்தி நடத்தப்பட்ட உண்ணாவிரதத்திற்கு மக்கள் ஆதரவு கிடைத்துள்ளதாக மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

By Vazhmuni
Google Oneindia Tamil News

கோவை :ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணைக்கு வலியுறுத்தி நடத்தப்பட்ட உண்ணாவிரதத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல ஆதரவு கிடைத்துள்ளது. என்று முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கோவையில் செய்தியாளர்களிடம் மாஃபா பாண்டியராஜன் பேசியது:

Mafoi K. Pandiarajan condemns TN Govt's hike of VAT

ஆர். கே நகர் இடைத்தேர்தலில் வேட்பாளரை தேர்ந்தெடுக்க நாளை பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும். வெற்றி வாய்ப்பு எங்களுக்கு பிரகாசமாக இருக்கிறது. ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணைக்கு வலியுறுத்தி நடத்தப்பட்ட உண்ணாவிரதத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல ஆதரவு கிடைத்துள்ளது.

இந்தியாவிலேயே தமிழ் நாட்டில் தான் குறைவான வரி விகிதம் இருந்தது. இதனை மாற்ற மத்திய அரசு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் பல முறை வலியுறுத்தியது. ஆனால் ஜெயலலிதா அதை நிராகரித்தார்.

இந்நிலையில் பெட்ரோலியத்திற்கான வாட் வரியைக் இந்த அரசாங்கம் உயர்த்தியது முன்னாள் முதல்வர் ஜெயலிதா அவர்களின் கொள்கைகளுக்கு முரணானது என்று அவர் தெரிவித்தார்.

English summary
Ma Foi K. Pandiarajan condemns over TN Govt hikes VAT and he says it will Contradict jayalalithaa policy.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X