தேசியக்கொடி அவமதிப்பு வழக்கு... கைதுக்கு அஞ்சாமல் வழக்கமான பணிகளில் மாஃபா பாண்டியராஜன்!
மதுசூதனை ஆதரித்து ஆர்கே நகரில் ஜெயலலிதாவின் உருவபொம்மையை வைத்து பிரச்சாரத்தில் ஈடுபட்ட மாஃபா பண்டியராஜன் மீது தேசியக்கொடி அவமதிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள போதிலும் அவர் தனது வழக்கமான வேலையில் ஈட
சென்னை: ஆர்கே நகர் தேர்தலில் ஜெயலலிதா சவப்பெட்டி உருவபொம்மையின் மீது, தேசியக் கொடியைப் போர்த்தி பிரச்சாரத்தில் ஈடுபட்ட முன்னால் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், அழகு முத்துச் செல்வி ஆகியோர் மீது காவல்துறையினர், தேசியக்கொடி அவமதிப்பு வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இருப்பினும் இதுகுறித்து சலசலப்பு அடையாமல் தனது வேலைகளில் அவர் வழக்கம் போல ஈடுபட்டுள்ளார்.

ஆர்கே நகரில் இடைதேர்தல் ஏப்ரல் 12ஆம் தேதி நடத்தப்படுவதாக இருந்தது. அப்போது ஒபிஎஸ் அணி சார்பில் போட்டியிடும் மதுசூதனுக்கு வாக்கு சேகரிக்க, ஜெயலலிதாவின் சவப்பெட்டிஉருவபொம்மை மீது தேசியக் கொடியை போர்த்தி ஓட்டு சேகரித்தனர். அந்த பிரச்சாரத்தில் மாஃபா பாண்டியராஜன், அழகு தமிழ்செல்வி, குப்பன் ஆகியோர் ஈடுபட்டனர்.
இந்நிலையில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட மாஃபா பாண்டியராஜன், அழகு தமிழ்செல்வி ஆகியோர் மீது தேசியக்கொடி அவமதிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் கீழ், குப்பன் கைது செய்யப்பட்டுள்ளார். மற்றவர்களும் கைது செய்யப்படுவார்களா என்ற பரபரப்பு நிலவுகிறது.
ஆனால், மாஃபா பாண்டியராஜன் தனது வழக்கமான வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். இதுகுறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்திலும் தெரிவித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications