விஜயதாரணி எம்.எல்.ஏ மீது போலீசில் புகார்: மகளிரணி துணைத்தலைவி குற்றச்சாட்டு
சென்னை: காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் இளங்கோவனை தரக்குறைவாக பேசியதாக மகளிரணி தலைவி விஜயதாரணி எம்.எல்.ஏ மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சத்தியமூர்த்தி பவனில் விஜயதாரணி எம்.எல்.ஏவின் பேனர் கிழிப்பு விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. விளக்கம் கேட்ட விஜயதாரணியை, கட்சியை விட்டு வெளியே போகச்சொன்னார் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் என்பது புகாராகும். இதனையடுத்து கட்சித்தலைவர் பதவியில் இருந்து இளங்கோவனை நீக்கவேண்டும் என்று கட்சித்தலைமைக்கு கடிதம் எழுதியுள்ளார் விஜயதாரணி.

அதே நேரத்தில் தான் விஜயதாரணியை தரக்குறைவாக பேசவில்லை என்று மறுத்துள்ளார் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன். இந்த நிலையில், சத்யமூர்த்தி பவனில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதாரணியை அவதூறாக பேசியதாக சென்னை, அண்ணாசாலை போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. விஜயதாரணியை தரக்குறைவாக பேசிய இளங்கோவனை கைது செய்ய வேண்டும் எனவும் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு பதிலடியாக அதே அண்ணாசாலை காவல் நிலையத்தில் விஜயதாரணி மீது புகார் அளித்துள்ளார் மகளிரணி துணைத்தலைவி மனோகரி. கட்சித்தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை தரக்குறைவாக பேசியதாகவும், அவரை கைது செய்யவேண்டும் என்றும் புகாரில் குறிப்பிட்டுள்ளார் மனோகரி.
கட்சித்தலைவரை கைது செய்யக்கோரி காவல் நிலையத்தில் மகளிரணி தலைவி புகார் அளிப்பதும், மகளிரணி தலைவி மீது நடவடிக்கை எடுக்க கோரி துணைத்தலைவி காவல் நிலையத்தில் புகார் அளிப்பதும் காங்கிரஸ் கட்சியில் மட்டுமே நடக்கும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications