சுகாதாரமற்ற உணவு... திண்டுக்கல் தலப்பாகட்டி பிரியாணி கடைக்கு சிக்கல்
திண்டுக்கல்: திண்டுக்கல் தலப்பாகட்டி பிரியாணி கடையில் சாப்பிட்ட ஒருவருக்கு ஃபுட் பாய்சன் ஆன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து விசாரணை மேற்கொண்ட சுகாதாராத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து நோட்டீஸ் அளித்துள்ளனர்.
திண்டுக்கல்லை சேர்ந்த கார்த்திகேயன் என்பவரின் சகோதரர்தான் பாதிக்கப்பட்ட நபராவார். பிரியாணி சாப்பிட்டு பாதிக்கப்பட்ட அவர் மருத்துவமனையில் அனுமதிக்கு சிகிச்சை பெற்றுள்ளார்.

வயிற்று வந்தது எப்படி என்று சந்தேகம் அடைந்த கார்த்திக்கேயன், மீண்டும் ஒரு பிரியாணியை பார்சல் வாங்கி அதை பரிசோதனை ஆய்வுக்கூடத்தில் கொடுத்து சோதனை செய்துள்ளார். அதில் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியானது.
பாதிக்கப்பட்டவரின் புகாரின் பேரில் திண்டுக்கல் சுகாதராத்துறை அதிகாரிகள் திண்டுக்கல் நகரில் உள்ள தலப்பாக்கட்டி கடையில் சோதனை செய்தனர். அதில் இறைச்சி, மீன் போன்ற பொருட்களை ஃப்ரிட்ஜில் சரியாக பராமரிக்காமல் காய்கறிகளுடன் போட்டு வைத்துள்ளனர். அதோடு உணவு சமைக்கும் இடமும் சுகாதரமற்ற முறையில் இருந்தது பார்த்து அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
முதல்நாள் சமைத்த உணவையும் குளிர்சாதன பெட்டியில் வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அதிகாரிகள் தலப்பாகட்டி பிரியாணி கடைக்கு நோட்டீஸ் அளித்துள்ளனர். அதோடு இறைச்சி பொருட்களை நீண்ட நாட்கள் குளிர்சாதன பெட்டியில் வைக்காமல் உடனடியாக சமைத்து வாடிக்கையாளர்களுக்கு வழங்கவேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.
தலப்பாக்கட்டி பிரியாணிக்கு பெரிய அளவில் விளம்பரம் கொடுக்கப்படுகிறது. நேசத்தோடு செய்யப்படுகிறது என்று கூறப்படும் பிரியாணி கடைக்காரர் கொஞ்சம் சுத்தம், சுகாதாரத்தோடு சமைத்தால் நன்றாக இருக்கும் என்பது வாடிக்கையாளர்களின் கோரிக்கையாகும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications