மாணவியுடன் உல்லாசம்- கணவரை போலீசில் மாட்டிவிட்ட மனைவி!
சென்னை: சென்னையில் மாணவி ஒருவரை திருமணம் செய்ய முயன்றவரை மனைவியே காவல்துறையிடம் பிடித்துக் கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கொடுங்கையூர் சவுந்தர்யா நகரைச் சேர்ந்தவர் வினோத்குமார். இவர் சைதாப்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் விற்பனை மேலாளராக வேலைபார்த்து வருகிறார்.
இவர் மூலக்கடை பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரை 2011 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
வினோத்குமார், வேலைபார்க்கும் பகுதியில் ஒரு தனியார் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்துவந்தவர் உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனைச் சேர்ந்த பெண் ஒருவர்.
இவரது தந்தை சென்னையில் தனியார் மென்பொருள் நிறுவன அதிகாரியாக பணிபுரிந்து வந்தார். மாணவி பள்ளிக்கு செல்லும்போது பார்த்த வினோத்குமார் அவர் மீது காதல் வயப்பட்டார். ஆசை வார்த்தைகள் கூறி மாணவியை மயக்கி தனது காதல் வலையில் விழவைத்தார்.
அதன் பின்னர் வினோத்குமாரும், மாணவியும் சென்னையில் பல்வேறு இடங்களுக்கும் சென்று தங்கள் காதலை வளர்த்து வந்தனர். வினோத்குமார் திருமணமானவர் என்பது தெரிந்தும், மாணவி தொடர்ந்து வினோத்குமாரை காதலித்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் அம்மாணவியின் தந்தை பணி மாறுதலாகி தனது சொந்த ஊரான டேராடூனுக்கே குடும்பத்தோடு சென்றுவிட்டார். இதனால் மாணவியைக் காணாமல் வினோத்குமார் தவித்தார். பின்னர் விஷயம் அறிந்து, அவ்வப்போது யாருக்கும் தெரியாமல் டேராடூன் சென்று அப்பெண்ணை சந்தித்துவிட்டு வந்தார்.
இதுபற்றி தெரிந்ததும் வினோத்குமாரை அவரது மனைவி கண்டித்தார். இதனால் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு மாணவியை திருமணம் செய்ய வினோத்குமார் முடிவெடுத்தார். அதன்படி 2 நாட்களுக்கு முன் அப்பெண்ணை பார்ப்பதற்கு வினோத்குமார் டேராடூன் சென்றார். திட்டமிட்டபடி யாருக்கும் தெரியாமல், அம்மாணவியை அழைத்துக்கொண்டு தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னை புறப்பட்டு வந்தார்.
இதற்கிடையில் வினோத்தின் மனைவி, மாணவியின் தந்தையை செல்போனில் தொடர்பு கொண்டு, வினோத்குமார் காதல் விவகாரத்தையும், இருவரும் திருமணம் செய்ய இருப்பது பற்றியும் விளக்கமாக கூறினார்.
வினோத் மனைவி கூறியதை கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவியின் தந்தை தனது நண்பர்களை அழைத்துக்கொண்டு ரயில் நிலையத்துக்கு விரைந்தார். ஆனால் அதற்குள் ரயில் புறப்பட்டுவிடவே அவர் டேராடூன் போலீசில் தனது மகளை மீட்டுத்தருமாறு புகார் கொடுத்தார்.
இந்தநிலையில், தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் தனது கணவர் வினோத்குமார், அம்மாணவியை அழைத்து வருவதையறிந்து வினோத்தின் மனைவி தனது உறவினர்கள் 5 பேருடன் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நேற்று அதிகாலை முதலே காத்திருந்தார்.
ரயில் வந்ததும் அதில் இருந்து இறங்கிய ஜோடியை சுற்றிவளைத்து பிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டபோது தான் வினோத் குமார் போலீசாரிடம் சிக்கினார். மேலும், வினோத்குமாரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட செல்போனில், அவரும், மாணவியும் உல்லாசமாக இருந்த காட்சியும் பதிவாகியிருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.
இந்த ஆபாச படங்களை தனது நண்பர்களுக்கு வினோத்குமார் அனுப்பியிருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து ரயில்வே போலீஸார், டேராடூன் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
தனது மகளை அழைத்துச் செல்வதற்காக அவருடைய தந்தை சென்னை புறப்பட்டு வருகிறார். தற்போது மாணவி புரசைவாக்கத்தில் உள்ள ஒரு காப்பகத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு கவுன்சிலிங் அளிக்கப்பட்டு வருகிறது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications