திருவண்ணாமலையில் டுபாக்கூர் டாக்டர் ஊசி போட்டு இளைஞர் பலி- போலி மருத்துவமனைக்கு சீல்!
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே போலி மருத்துவரிடம் சிகிச்சை பெற்று ஊசி போட்டுக்கொண்ட இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. தலைமறைவாக இருந்த போலி மருத்துவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் சுகாதாரத்துறை அதிகாரிகள் அவ்வப்போது சோதனை நடத்தி போலி மருத்துவர்களை கைது செய்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று திருவண்ணாமலையில் போலி மருத்துவர் போட்ட ஊசியில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம் அரணாப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் தினக் கூலியாக இருக்கிறார். கட்டிட வேலைக்கு சென்ற இடத்தில் காலில் அடிப்பட்ட காரணத்தால் அருண் என்ற போலி மருத்துவரிடம் சிகிச்சைக்காக சென்றுள்ளார். அப்பகுதியில் முறையான கல்வித் தகுதியில்லாமல் அல்லோபதி மருத்துவ பயிற்சி எடுத்து வந்த அருண், சுரேஷுக்கு ஊசி போட்டுள்ளார்.
சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய சுரேசுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதையடுத்து, அவர் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சுரேஷ் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதனையடுத்து ஊசி போட்ட போலி மருத்துவர் அருண் அங்கிருந்து தப்பியோடி தலைமறைவானார். இதையடுத்து, அருண் நடத்தி வந்த 'அருணாச்சல கிளினிக்'கிற்கு சுகாதார துறையினர் அதிகாரப்பூர்வமாக சீல் வைத்தனர். தலைமறைவான அருணை தேடி வந்தனர். ஏற்கனவே இரண்டு முறை போலியாக மருத்துவம் பார்த்ததாக அருண் கைது செய்யப்பட்டுள்ளார்.
இளைஞர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருந்த அருணை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications