தம்பி மனைவியை தனக்கும் "மனைவி"யாக்கிய கூலித் தொழிலாளி.. விஷம் குடித்தார்
கோவை: கோவையில் கள்ளத் தொடர்பு அம்பலமானதால் தம்பியின் மனைவியுடன் தொழிலாளி ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்ய முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
கோவையை அடுத்த போத்தனூர் இடையர் பாளையத்தை சேர்ந்தவர் கருப்பசாமி. மில்லில் ஊழியராக வேலைபார்த்து வருகிறார். இவரது மனைவி பாரதிமணி. இவர்களுக்கு கடந்த 5 ஆண்டுக்கு முன்பு திருமணமானது. ஒரு குழந்தை உள்ளது. இவர்கள் வீட்டின் அருகே கருப்பசாமியின் அண்ணன் பாலசுப்பிரமணியம் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் பாலசுப்பிரமணியமும், பாரதிமணியும் நெருங்கி பழகினார்கள். இவர்களது கள்ளத்தொடர்பு விவகாரம் கருப்பசாமிக்கு தெரியவரவே மனைவியை கண்டித்தார். அதை அவர் காதில் வாங்கிக் கொண்டதாக தெரியவில்லை.
இதற்கிடையே திடீரென்று பாலசுப்பிரமணியமும், பாரதிமணியும் மாயமானர்கள். இது குறித்து கருப்பசாமி போத்தனூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் விசாரித்து வந்தனர்.
போலீசார் தங்களை தேடுவதை அறிந்ததும் கள்ளக்காதல் ஜோடி ஊர் திரும்பியது. இருவருக்குமிடையே பஞ்சாயத்து பேசப்பட்டது. அப்போது கருப்பசாமி இனிமேல் பாரதிமணி எனக்கு தேவையில்லை, பாலசுப்பிரமணியத்துடன் வாழட்டும் என்று கூறி விட்டார்.
பாரதிமணியும் பாலசுப்பிரமணியத்தின் வீட்டுக்கு சென்று விட்டார். இன்று காலை வீட்டின் முன்பு பாலசுப்பிரமணியமும், பாரதிமணியும் விஷம் குடித்த நிலையில் வாயில் நுரை தள்ளி மயங்கி கிடந்தனர். அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் அவர்கள் இருவரையும் கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. போத்தனூர் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications