மனைவியைக் கொன்றுவிட்டு கள்ளக்காதலனை கத்தியால் குத்திய பெட்ரோல் பங்க் ஊழியர்
சென்னை: சென்னையில் பெட்ரோல் பங்க் ஊழியர் ஒருவர் மனைவியைக் கழுத்தை நெறித்துக் கொன்றுவிட்டு, அவரின் கள்ளக்காதலனை கத்தியால் குத்திவிட்டு போலீசில் சரண் அடைந்தார்.
சென்னை கோயம்பேட்டில் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் வேலை பார்த்து வந்தவர் சுதாகர்(32). அவரது மனைவி சுகந்தி(27). அவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் சுகந்திக்கும் சுதாகரின் நண்பர் இளங்கோவனுக்கும்(30) இடையே கள்ளத் தொடர்பு ஏற்பட்டது. இது குறித்து அறிந்த சுதாகர் மனைவியை கண்டித்தார்.
ஆனால் சுகந்தியோ கள்ளத்தொடர்பை தொடர்ந்தார். இந்நிலையில் சுகந்தி இளங்கோவனுடன் போனில் நேற்று மதியம் பேசிக் கொண்டிருப்பதை பார்த்த சுதாகர் அவருடன் தகராறில் ஈடுபட்டார். பின்னர் மனைவியை கழுத்தை நெறித்துக் கொன்றுவிட்டு, சில தெருக்கள் தள்ளி இருக்கும் இளங்கோவனின் வீட்டுக்கு சென்றார். அங்கு வீட்டில் தனியாக இருந்த இளங்கோவனை சுதாகர் கத்தியால் குத்தினார்.
வலி தாங்க முடியாமல் அலறிய இளங்கோவனின் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து சுதாகர் போலீசில் சரண் அடைந்தார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications